Load Image
Advertisement

கொலை சம்பவத்தை குடும்பச் சண்டை என்பதா ? முதல்வர் மீது அண்ணாமலை காட்டம்!

Is the murder a family feud? Annamalai Kattam on the Chief Minister!   கொலை சம்பவத்தை குடும்பச் சண்டை என்பதா ?   முதல்வர் மீது அண்ணாமலை காட்டம்!
ADVERTISEMENT
விழுப்புரம் : திமுகவினர் ஈடுபடும் கொலை உள்ளிட்ட குற்றங்களை குடும்பச் சண்டை என்று முதல்வர் ஸ்டாலின் கடந்து செல்ல முடியாது என பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


விழுப்புரத்தில் பழக்கடையில் நடைபெற்ற தகராறை தடுக்க வந்த இப்ராஹிம் என்பவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார். இதில் கத்தியால் குத்தியவர் திமுக.வைச்சேர்ந்தவர் என்பதும், ஸ்டாலின் படம் பொறித்த டி-ஷர்ட் அணிந்திருக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி சட்டசபையில் எழுப்பிய கேள்வி எழுப்பினார்.
Latest Tamil News
Latest Tamil News இதற்கு முதல்வர் .ஸ்டாலின் பதில் அளித்து பேசுகையில், விழுப்புரத்தில் பழக்கடை நடத்தி வரும் ஞானசேகருக்கும், அவரது மகன்களுக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப சண்டையில் தலையிட்ட இப்ராஹிம் என்பவரை கத்தியால் குத்தியதில் அவர் உயிரிழந்திருக்கிறார். இச்சம்பவத்தில் ஈடுபட்ட வல்லரசு மற்றும் ராஜசேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என விளக்கம் அளித்தார்.

முதல்வரின் விளக்கத்தை விமர்சித்து பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது, "விழுப்புரத்தில் முதல்வர் ஸ்டாலின் படம் பொறித்த பனியன் அணிந்த ரவுடிகள், பட்டப்பகலில் இப்ராஹிம் ராஜா என்பவரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர். இன்னொரு கடையிலும் பொதுமக்கள் மேல் தாக்குதல் நடத்தியிருக்கின்றனர். இதனை குடும்பச் சண்டை என்று சட்டசபையில் விளக்கம் கொடுத்திருக்கிறார் முதல்வர்.

குற்றவாளிகள் மேல் நடவடிக்கை எடுக்காமல், ஒவ்வொரு குற்றச் சம்பவங்களும், குடும்பச் சண்டை என்ற அளவில் குறைத்துக் காட்டப்பட்டு வருகிறது. ஆட்சியில் உள்ள மிதப்பில் தொடர்ந்து திமுகவினர் ஈடுபடும் கொலை உள்ளிட்ட குற்றங்களை குடும்பச் சண்டை என்று முதல்வர் கடந்து செல்ல முடியாது. பொதுமக்களுக்கு எந்தவிதப் பாதுகாப்பு மில்லாமல் சீர்குலைந்து கிடக்கும் சட்டம் ஒழுங்கில் கவனம் செலுத்துமாறும், கட்டுப்பாடின்றி அராஜகங்கள் செய்து வரும் திமுகவினரை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.




வாசகர் கருத்து (14)

  • venugopal s -

    சரி சரி, இதுக்கெல்லாம் ரொம்ப டென்ஷன் ஆக வேண்டாம் , நாங்கள் உங்களிடம் பாஜக அதிமுக கூட்டணி குறித்து அமித்ஷா கூறியது பற்றி கேட்க மாட்டோம்!

  • மதுமிதா -

    கொலை என்றால் அமைதிப் பூங்கா என்ற பெயருக்கு இழுக்காயிற்றே

  • அப்புசாமி -

    வடிவேல் மாதிரி அவிங்க ரெண்டுபேரு அடிச்சிக்கிட்டா இவரு ஏன் தடுக்கப் போகணும்?

  • ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா

    எந்த ஐபிசி பிரிவில் குற்றம் பதிவாகி உள்ளது என்பது தான் முக்கியம். இது எக்ஸ் ஐபிஎஸ் க்கு தெரிந்திருக்கணுமே. குடும்பத் தகறாரை ராணுவத்துக்கும் டீம்கா அரசுக்கும் சண்டைங்குற ரேஞ்சுக்கு உருட்டி விட்டு கிளப்பி விட்டவர் தானே நீங்க. மக்கள் உங்க மூக்கை ஒடைச்சி வெரட்டினாங்க. இப்போ எப்படி உருட்டலாம்ன்னு பாக்குறீங்களா?

  • Fastrack - Redmond,இந்தியா

    ராமஜெயம் கொலை இந்த ரகம் தான் என்று சொல்லுவாரா ..

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்