Load Image
Advertisement

பிரதமர் முதுமலை வருகை? பராமரிப்பு பணிகள் தீவிரம்

Prime Ministers visit to Mudumalai? Maintenance work is intensive    பிரதமர் முதுமலை வருகை? பராமரிப்பு பணிகள் தீவிரம்
ADVERTISEMENT
கூடலூர்: முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு, அடுத்த மாதம் பிரதமர் வர வாய்ப்புள்ளதாக கூறப்படும் தகவலை தொடர்ந்து, முகாமில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில், குட்டி யானைகளும் அதன் வளர்த்த பாகன்களுக்கும் இடையேயான பாசப்பினைப்பை மையமாக வைத்து, ஊட்டியை சேர்ந்த கார்த்திகி கனசால்வஸ் என்ற பெண் இயக்குனர் எடுத்த ஆவண படத்துக்கு, சிறந்த ஆவண படத்திற்கான 'ஆஸ்கார்' விருது கிடைத்தது. இதில், இடம்பெற்ற யானை பாகன் கொம்பன் அவர் மனைவி பெல்லியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும், முதுமலை தெப்பக்காடு யானைகள் முகம் உலகம் முழுவதும் புகழ் பெற்றுள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் வருகையும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், அடுத்த மாதம் இரண்டாவது வாரம், பிரதமர் மோடி, முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாம் வந்து, 'ஆஸ்கார்' ஆவண பட யானபாகன் தம்பதிகள் சந்திக்க இருப்பதாக தகவல் கூறப்படுகிறது. இத்தகவலை அதிகாரிகள் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், தெப்பக்காடு ஜங்சனில் இருந்து முகாமுக்கு செல்லும் வனத்துறை சாலை சீரமைப்பு, குட்டி யானை வைத்து பராமரிக்கப்படும் கரால் பகுதிக்கு பாதை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு சீரமைப்பு பணிகள் மிக அவசரமாக மேற்கொண்டு வருகின்றனர். இப்பணிகளை அதிகாரிகளும் அடிக்கடி ஆய்வு செய்து வருகின்றனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்