கர்நாடகாவில் ஆட்சி: பா.ஜ., காங்., தலைவர்கள் உறுதி

கர்நாடகாவில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி மே மாதம் முடிவடைகிறது. இந்நிலையில் 224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக மே 10ம் தேதி தேர்தல் நடத்தப்பட்டு, மே 13ம் தேதி ஓட்டு எண்ணிக்கை எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் வரும் 13ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை நடைபெறுகிறது.
அரசியல் களம் சூடுப் பிடித்துள்ளது. அந்த வகையில் பாஜ., மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என தீவிர பிரசாரங்கள் செய்து வருகிறது. அதேபோல் காங்., தலைவர்கள் போட்டியாக பிரசாரங்கள் செய்து வருகின்றனர்.
பா.ஜ., மூத்த தலைவர் எடியூரப்பா மற்றும் காங்., தலைவர்கள் சித்தராமையா, சிவக்குமார் ஆகியோர் தனி தனியாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

பா.ஜ., ஆட்சியை பிடிக்கும்:
அப்போது பா.ஜ., மூத்த தலைவர் எடியூரப்பா கூறியிருப்பதாவது: பிரதமர் மோடியின் தலைமையில் நாங்கள் மீண்டும் ஆட்சி அமைப்போம். காங்கிரஸ் கட்சியில் ஊழல் மலிந்துவிட்டது. அந்த கட்சி தலைவர்கள் உண்மைக்கு மாறாக பல்வேறு குற்றங்களை சாட்டி வருகின்றனர். பா.ஜ.,வில் பிரதமர் மோடி, அமித்ஷா போன்ற தலைவர்கள் உள்ளனர். அவர்களை கர்நாடக மக்கள் வரவேற்கிறார்கள். எனவே கர்நாடக தேர்தலில் பா.ஜ., 100 சதவீதம் பெரும்பான்மையான ஓட்டு வித்தியாசத்தில் ஆட்சியை பிடிக்கும். பா.ஜ., நிச்சயம் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்:
முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான சித்தராமையா கூறுகையில், ‛பா.ஜ., 60 தொகுதிகளை கூட தாண்டி வெற்றிப்பெறாது. எங்களுக்கு எந்தவொரு கட்சியிடம் இருந்தும் அச்சுறுத்தல் வரவில்லை. மீண்டும் மாநிலத்தில் ஆட்சி அமைப்போம்' என்றார்
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், கர்நாடக மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஓட்டளிக்க முடிவு செய்துவிட்டனர். நாங்கள் இங்கு ஆட்சி அமைப்போம்' என்றார்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் வெற்றி யாருக்கு என்பது, மே.13ம் தேதி தெரிய வரும்.
நாக்கு மரத்துப்போனவர்கள் இருக்கும் வரை பாவக்காதான் ஆட்சிக்கு வரும்.