எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ (FSSAI) எனப்படும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் என்ற அமைப்பு இந்தியாவில் உள்ள உணவு பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஏற்படுத்தப்பட்டது. உணவு பொருட்களை பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் இந்த அமைப்பிடம் ஒப்புதல் பெற வேண்டும். இந்த நிலையில் தமிழகத்தில் ஆவின் போன்று, கர்நாடகாவில் நந்தினி, கேரளாவில் மில்மா ஆகிய பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பிற்கு அவ்வமைப்பு கடிதம் அனுப்பியது. அதில், தயிர் பாக்கெட்களில் ‛தஹி' என்ற ஹிந்தி சொல்லை பயன்படுத்த வேண்டும் என கூறியிருந்தது.

இதற்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழக முதல்வர் ஸ்டாலின், ‛எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ, தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்! மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! ஹிந்தி திணிப்பை நிறுத்துங்கள். குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம்! தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்து விடுவீர்கள்!' என எச்சரிக்கையுடன் கண்டனம் தெரிவித்திருந்தார்.
தமிழகம் மட்டுமல்ல கர்நாடகா உள்ளிட்ட பலதரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியதால் ஆவின் தயிரில் ஹிந்தியில் ‛தஹி' என்ற வார்த்தை கட்டாயமில்லை என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் தனது உத்தரவை வாபஸ் பெற்றுள்ளது.
வாசகர் கருத்து (30)
ஆவின் தயாரிக்கும் இனிப்பு வகைகள் எதற்குமே தமிழ்ப் பெயர் கிடையாது. குலாப்ஜாமூன், ரசகுல்லா,பால் கோவா, மில்க் பேடா, மைசூர்பா, அல்வா, ,காஜு கத்லி , காஜு பிஸ்தா, மோதிபாக், ஹல்வா, பாதுஷா இதையெல்லாம் எப்போ தமிழ்ல மாற்றப் போறாங்க?
இவங்களுக்கு எலக்சன் சமயத்துல வட மாநிலங்களில் வடமாநிலத்தவர் வாழும் பகுதிகளில் ஹிந்தியில் பிரச்சாரம் செய்து போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள் அப்போது ஹிந்தி இனிப்பாக உள்ளதா. இவர்கள் பிஜேபியை தோற்கடிக்க வேண்டும் என்று உத்தரப்பிரதேசம் சென்று ஹிந்தியில் பிரச்சாரம் செய்தார்கள் போஸ்டர் அடித்து ஒட்டினார்கள். சமீபத்தில் வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுகிறார்கள் என்ற விஷயத்தில் விஷயத்தில் பீகாரிகளுக்கு ஆதரவாக ஹிந்தியில் போஸ்டர் அடித்து ஒட்டினார்கள் திருப்பூரில். ஈரோடு கிழக்குப் பகுதியில் இடைத்தேர்தல் வந்த போது வடமாநிலத்தவர் வாழும் பகுதிகளில் இந்தியில் பிரச்சாரம் செய்து போஸ்டர் அடித்து கொட்டினார்கள். இவர்கள் சுயநலத்திற்காக ஹிந்தியை பயன்படுத்திக் கொள்ளலாம் அவர்கள் நடத்தும் கல்விக்கூடங்களில் இந்தியை வியாபாரம் செய்து காசு பார்க்கிறார்கள். ஆனால் दही என்ற இரண்டு எழுத்துக்கள் இவர்களுக்கு கசக்கிறதாம். கொள்கையும் கிடையாது கோட்பாடும் கிடையாது.
தஹிகை விட மோர் நல்லது வயிற்றுச் சூட்டை தணிக்கும்.
பனீர், லஸ்ஸி, குல்பி போன்று தஹி தமிழ் வார்த்தை கிடையாது.
தஹி நஹி? தயிர் ஹையா? 😀