ADVERTISEMENT
சென்னை: முதல்வர் பிறந்த நாளை காரணம் காட்டி கல்லூரிக்குள் கட்சி அரசியலை கொண்டு செல்வதற்காக திமுகவிற்கு தமிழக பா.ஜ., கண்டனம் தெரிவித்து உள்ளது.
முதல்வர் ஸ்டாலினின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு, அம்பேத்கர் சட்ட பல்கலையில், ' ஆர்டிக்கிள் 14 மற்றும் சமூக நீதி' என்ற தலைப்பில் பேச்சுப்போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக சட்டப்பிரிவு அணியை சேர்ந்த என்ஆர் இளங்கோ அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், மாணவர்களுக்கு பல்கலை டீன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக பா.ஜ., துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: முதல்வர் பிறந்தநாளை காரணம் காட்டி, தவறான முன்னுதாரணத்தை உருவாக்கி பேச்சு போட்டி என்ற பெயரில் கல்லூரிக்குள் கட்சி அரசியலை கொண்டு செல்ல முயலும் தி.மு.க., வையும், அரசு சட்ட கல்லூரி நிர்வாகத்தையும் வன்மையாக கண்டிக்கிறேன்.
முதலவர் ஸ்டாலின் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு மாணவர்களிடையே அரசியலை புகுந்துவதை நிறுத்த வேண்டும்.
பிரதமர் பிறந்த நாளன்று பா.ஜ., இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த முனைந்தால் ஒப்புதல் தர கல்லூரி நிர்வாகம் இப்போதே இசைவு தெரிவிக்க வேண்டும். இல்லையேல், தி.மு.க., வின் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

வாசகர் கருத்து (14)
ஐயோ ,இதெல்லாம் இல்லாம அந்த கட்சியா? மாணவர்களை இந்தி எதிர்ப்பு என்ற பெயரில் பாழாகியது யாரு?
அப்பா......ஒரு தயிர் பாக்கெட்டிற்கு எவளோ கொத்தடிமைகள்
IF ANY THING DMK HAS DONE IS ANTI INDIAN ANTI HINDU AND IS PUPPET OF XIAN MISSIONARIES WHO EVER SUPPORT DMK ARE EITHER INHUMANS UNCIVILIZED AND GREAT SINNERS AND WILL REPEND SOON IN THE COMING DAYS. NO BODY CAN DENY DIVINE JUSTICE AND THAT WOULD PREVAIL UPON BOTH DRAVIDIAN PARTIES AND THEY WILL HAVE TO PAY HEAVY PRICE. LETS SEE IF ANY COURTS INCLUDING THE GREAT LEFT LIBERAL SUPREME QUOTA SAVES THEM
நீங்கள் செய்தால் சரியாக இருக்கும் அப்படித்தானே
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
நாட்டுக்குள் அராஜகத்தையும் மக்கள் மனதில் மதத்தையும் நுழைத்த நீங்க இதை பத்தி பேச கூடாது.... ஆமா உங்க கட்சியில பெரியவுங்க யாரும் இல்லையா... எப்ப பார்த்தாலும் நீங்களே வந்து உளறுறீங்க....