3 கிலோ நகையுடன் கடத்தல் நாடகம்
அண்ணா நகர்: நொளம்பூரில் உள்ள ஏ.ஆர்.டி., என்ற நகைக் கடையின் ஊழியர்கள் ஆசிக் மற்றும் அந்தோணிராஜ் ஆகியோர், நேற்று முன்தினம் இரவு, பிராட்வேயில் இருந்து, 3 கிலோ தங்க நகைகளுடன், அண்ணா நகர் வழியாக நொளம்பூருக்கு காரில் வந்தனர்.
அப்போது, அண்ணா நகர் ரவுண்டானா அருகே, சொகுசு காரில் வந்த மர்ம கும்பல், இவர்களிடம் இருந்த நகைகளை பறித்து தப்பியதாக அண்ணா நகர் போலீசாருக்கு புகார் வந்தது. விசாரணையில், ஊழியர்கள் ஆசிக், அந்தோணிராஜ் ஆகியோரே நகை கொள்ளை நாடகத்திற்கு உடந்தையாக இருந்தது அம்பலமானது.
மேற்கண்ட நகைக்கடை நிர்வாகம், 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்யும் நபர்களுக்கு, வாரம் 3,000 ஆயிரம் வீதம் தருவதாக தெரிவித்துள்ளனர். இதை நம்பி முதலீடு செய்தவர்களுக்கு, முறையாக பணத்தை வழங்காமல் இழுத்தடித்துள்ளனர்.
இதில் பாதிக்கப்பட்ட நபர்களுடன், ஆசிக் மற்றும் அந்தோணிராஜ் சேர்ந்து, கொள்ளை நாடகத்தில் ஈடுபட்டது தெரிந்தது. சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!