Load Image
Advertisement

இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அள்ளிக்கொடுக்க உள்ள ஆரம்பநிலை ஸ்டார்ட்அப்கள்

Startups that aim to provide employment to the youth   இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அள்ளிக்கொடுக்க உள்ள ஆரம்பநிலை ஸ்டார்ட்அப்கள்
ADVERTISEMENT
பெரிய பெரிய ஸ்டார்ட்அப்களும், ஐடி நிறுவனங்களும் அதிக எண்ணிக்கையில் பணிநீக்கம் செய்துகொண்டிருக்கும் நேரத்தில் ஆரம்ப நிலை ஸ்டார்ட்அப்களில் சுமார் 80 சதவீதம், 2023ஆம் ஆண்டில் புதிதாக பணியாளர்களை பணியமர்த்த உள்ளன.

சுவாரஸ்யமாக, 57 சதவீத தொடக்க நிறுவனங்கள் நிரந்தர ஆட்சேர்ப்புகளை எதிர்பார்க்கும் அதே வேளையில், சுமார் 43 சதவீதம் பேர் தற்காலிக மற்றும் கிக் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளனர்.

இந்திய வர்த்தக தொழில்துறை கூட்டமைப்பு மற்றும் மனித வள சேவை நிறுவனமான ராண்ட்ஸ்டாட் இந்தியா ஆகியவை 300க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்களிடம் வேலைவாய்ப்பு டிரண்ட்கள் குறித்த தங்கள் ஆய்வை மேற்கொண்டன. சீரிஸ் ஏ மற்றும் பி மூலம் நிதி திரட்டிய ஸ்டார்ட்அப்கள் வசம் மூலதனம் நன்கு உள்ளது. புதிய திறமையாளர்களை வேலைக்கு அமர்த்த முனைவதாக அவர்கள் கூறியுள்ளனர். சர்வேயின் படி, 92 சதவீதம் நிறுவனங்கள் புதிய திட்ட ஆர்டர்கள், முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டப்பட்ட கூடுதல் நிதி மற்றும் விரிவாக்க உத்திகள் ஆகியவற்றால் ஆட்சேர்ப்பை நடத்த உள்ளதாக தெரிவித்திருக்கின்றனர்.
Latest Tamil News ஜூனியர் மற்றும் மிட்-லெவல் ஊழியர்கள் பணியமர்த்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஏறக்குறைய 38 சதவீத ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், அதிக ஜூனியர் லெவல் ஊழியர்களை நியமிக்க விரும்புவதாகவும், 27 சதவீதம் பேர் நடுத்தர அனுபவம் கொண்டவர்களை பணியமர்த்துவதில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் சர்வேயில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்ரிடெக் எனும் விவசாயம் சார்ந்த நிறுவனங்கள் மற்றும் வாகனத் துறைகளில் மூத்த நிலை ஊழியர்களை எடுக்க உள்ளனர்.

மூத்த நிலை ஊழியர்களுக்கு ஐதராபாத் மற்றும் புனேவில் உள்ள ஸ்டார்ட்அப்கள் வாய்ப்புகளை வழங்குகின்றன. கொல்கத்தா, பெங்களூரு, மும்பை, சென்னை, புனே மற்றும் டெல்லி என்சிஆர் போன்ற நகரங்களில் நடுத்தர அளவிலான பணியமர்த்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்று அறிக்கை கூறுகிறது. சுமார் 28 சதவீத நிறுவனங்கள் தங்கள் குழுக்களை 11 முதல் 20 சதவீதம் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளன.
Latest Tamil News ஸ்டார்ட்அப்களில் டேட்டா & அனலிடிக்கிஸ், மென்பொருள் உருவாக்கம் மற்றும் பொறியியல் ஆகிய திறன்களுக்கு டிமாண்ட் உள்ளது. அதாவது புல் ஸ்டாக் டெவலப்பர்கள், மூத்த மென்பொருள் பொறியாளர்கள், புராடக்ட் மற்றும் புரோகிராம் மேனேஜர்கள் போன்ற ரோல்கள் கிடைக்கும்.

இவை தவிர விண்வெளி மற்றும் பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் சுகாதார துறையைச் சேர்ந்த ஸ்டார்ட்அப்கள் தங்கள் பணியமர்த்தல் நடவடிக்கைகளை 30 சதவீதத்திற்கு மேல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்ரிடெக், செயற்கை நுண்ணறிவு (AI), மெஷின் லர்னிங் (ML), டீப்டெக், ஈ-காமர்ஸ் மற்றும் டெலிவரி சேவைகள் போன்றவைவும் பணியாளர்களை அதிகரிக்கலாம் என்கின்றனர்.


வாசகர் கருத்து (3)

  • Sampath Kumar - chennai,இந்தியா

    எல்லாம் வேலி வேஷம் உண்ணும் உருப்படியா நடந்ததா கிடையாது

  • Raa - Chennai,இந்தியா

    தமிழ் நாட்டில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒண்ணுமே தெரியவில்லையே

  • Raa - Chennai,இந்தியா

    ……

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement