ADVERTISEMENT
கோவை: சென்னை- கோவை வந்தேபாரத் ரயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
12வது வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி ஏப்.8ம் தேதி துவக்கி வைக்க உள்ளார்.

சென்னை சென்ட்ரலில் இருந்து அதிகாலை 5.40 மணிக்கு வந்தே பாரத் ரயில் புறப்பட்டு, கோவைக்கு 11.16 மணிக்கு வந்தடைந்தது.
இங்கிருந்து, நண்பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு, மாலை 6.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும் என ரயில்வே துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
12வது வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி ஏப்.8ம் தேதி துவக்கி வைக்க உள்ளார்.
இந்நிலையில், சென்னை - கோவை இடையே வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் இன்று (மார்ச் 30) வெற்றிகரமாக நடந்தது.

சென்னை சென்ட்ரலில் இருந்து அதிகாலை 5.40 மணிக்கு வந்தே பாரத் ரயில் புறப்பட்டு, கோவைக்கு 11.16 மணிக்கு வந்தடைந்தது.
இங்கிருந்து, நண்பகல் 12.40 மணிக்கு புறப்பட்டு, மாலை 6.40 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும் என ரயில்வே துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
சிறப்பம்சம்
கோவை- சென்னை இடையே இயக்கப்பட உள்ள வந்தே பாரத் ரயில், 495 கி.மீ., தூரத்தை 6 மணி நேரம், 10 நிமிடங்களில் சென்றடையும். புதன்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களும் இயக்கப்படும். இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும். கோவையில் காலை, 6 மணிக்கு புறப்படும் ரயில் மதியம், 12:30 மணிக்கு சென்னை சென்றடையும். சென்னையில் இருந்து மதியம் 2: 30 மணிக்கு புறப்பட்டு இரவு, 8: 30 மணிக்கு கோவை வந்தடையும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
மோதிஜி இருக்கும்போது எதுவும் சாத்யம். இனி முதுகை ஒடிக்கும் பத்து மணி நேர பயணம் இல்லை. பாரத் மாதா கி ஜய். பாஜக விற்கு வோட்டை போடுங்கள்