ராகுல் எம்.பி பதவி பறிப்பு: ஜனநாயக கொள்கைகளை எதிர்பார்க்கிறோம்: ஜெர்மனி கருத்து
பெர்லின்: ராகுல் எம்.பி பதவி தகுதி நீக்கம் குறித்து, ஜனநாயக கொள்கைகளை எதிர்பார்க்கிறோம் என ஜெர்மனி கருத்து தெரிவித்துள்ளது.

மோடி எனும் சாதி குறித்து அவதூறாக பேசிய வழக்கில், ராகுலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையை நீதிமன்றம் வழங்கியது. இதையடுத்து, ராகுல் எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இது குறித்து ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், இந்தியாவின் எதிர்க்கட்சியை சேர்ந்த அரசியல்வாதிக்கு, எதிராக முதன்முறையாக விதிக்கப்பட்ட தீர்ப்பு பற்றி நாங்கள் கவனித்து வருகிறோம். அவரது, பார்லி., எம்.பி. பதவி முடக்கம் பற்றியும் கவனம் கொண்டுள்ளோம்.

நாங்கள் அறிந்த வரை, இந்த தீர்ப்புக்கு எதிராக ராகுல் மேல்முறையீடு செய்வார் என தெரிகிறது. அதன்பின்னர், இத்தீர்ப்பு நிலையானதொன்றா? என்றும், அவரது பதவி முடக்கம், ஏதேனும் ஓர் அடிப்படையில் உள்ளதா? என்பது பற்றி தெரிய வரும். இந்த விஷயத்தில், நீதிமன்ற சுதந்திரம் மற்றும் அடிப்படை ஜனநாயக கொள்கைகள் இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (54)
அனாவசியமாக இந்தியாவின் உள்நட்டு பிரச்சினைகளில் மூக்கை நுழைக்க வேண்டாம்.உங்கள் நாட்டு பிரச்சினைகளை பற்றி யோசியுங்கள்.எங்கள் சட்டப்படி என்ன நடவடிக்கை தேவையோ அதை கேட்பதற்கு உங்களுக்கு தகுதி இல்லை....
இந்திய மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் இனிமேல் நீதிமன்றத்தால் பாதிக்கப்பட்ட இந்திய மக்கள் அனைவரும் ஜெர்மனி நாட்டினிடம் முறையிட்டாள் உடனடி பலன் கிடைக்கும் போல ..மேலும் இந்தியாவின் உண்மையான உரிமையாளர் ஜெர்மனி என்று இப்போதுதான் நமக்கு தெரிய வருகிறது...
நீ யாரு உனக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்பதம்
ஜெர்மனி பள்ளிகளில் பெண்கள் ஏன் பர்தா அணிய தடை ?ஜனநாயக விரோதம் இல்லையா? ஜெர்மனி வெளியுறவுத்துறை தகுதியற்ற ஆட்களால் நிரம்பியுள்ளது. ஹிட்லர் இப்படித்தான் அடுத்த நாடுகளின் விவகாரங்களில் தலையிட்டார். புடின் சொல்வது போல் நியோ நாஜிகள் ஜெர்மனியில் தலை எடுக்க ஆரம்பித்துவிட்டன.
எங்கள் நாட்டின் நீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வழங்க வேண்டும் என்று நீங்கள் கூறுவீர்களா ???....இதேபோல உங்கள் நாட்டின் விசயத்தை பற்றி நாங்கள் கருத்து கூறினால் ஏற்றுக்கொள்ள முடியுமா ???