மோடியை சிக்க வைக்க பிரஷர் கொடுத்த சிபிஐ; அமித்ஷா தகவல்
புதுடில்லி: பிரதமர் மோடியை சிக்க வைக்க தனக்கு சிபிஐ பிரஷர் கொடுத்ததாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். டில்லியில் உள்ள ஒரு ஆங்கில சேனல் நடத்திய சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுகையில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: ராகுல் சட்டப்படியே குற்றவாளி என கோர்ட் அறிவித்துள்ளது. இதில் எங்களின் பங்கு எதுவும் இல்லை. அவர் பிரதமர் மோடியை மட்டும் தாக்கி பேசவில்லை. மோடி என்ற பிற்படுத்தப்பட்ட இனத்தையே அவமானப்படுத்தி உள்ளார். குற்றவாளி என அறிவிக்கப்பட்டால் தானாக பதவி இழக்க நேரிடும். இது தான் நமது நாட்டின் சட்டம். ஆனால் இவரது தண்டனைக்கு எதிராக கோர்ட்டுக்கு செல்லாமல் எங்களை குறை கூறுகிறார். எம்.பி.,யாகவும் இருக்க வேண்டுமாம், கோர்ட்டுக்கு செல்ல மாட்டாராம். இது என்ன அடம் என்று புரியவில்லை.
இதற்கு முன்னதாக ஜெயலலிதா , லாலு உள்பட 17 பேர் இது போல் தண்டிக்கப்பட்டுள்ளனர். யாரும் கறுப்புச்சட்டை அணிந்து போராடவில்லை. ஆனால் ராகுல் நாங்கள் தான் காரணம் என்பது போல் பேசுகிறார்.

ராகுல் விவகாரத்தில் நாங்கள் யாருக்கும் அழுத்தம் கொடுக்கவில்லை. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பிரதமர் குஜராத் முதல்வராக இருந்தபோது போலி என்கவுன்டர் வழக்கில் மோடியை சிக்க வைக்க கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு என் மீது சி.பி.ஐ., அழுத்தம் கொடுத்தது. இவ்வாறு அமித்ஷா கூறினார்.
வாசகர் கருத்து (15)
அமித் ஷாவிடம் காங்கிரஸ் கட்சியின் பாச்சா பலிக்குமா?
500, 1000/- ரூபாய் அச்சடிக்கும் மெஷினை பாக். வசம் கொடுத்த சூழல், அவசியம், காரணம் பற்றி உள்துறை உடனே ஒரு விசாரணையை துவங்குவது நல்லது+++++ நமது பொருளாதார சீரழிவு,,, காஷ்மீர் பயங்கர வாதிகள் கையில் கட்டுக்கடங்கா பணப் புழக்கம், ,,அதன் மூலம் அவர்கள் , செய்த கொடூர கொலைகள், நாட்டின் அமைதியை சீர் குலைத்தது , ,அதே நேரம் பாகிஸ்தானின் பொருளாதாரம் கொடி கட்டி பறந்தது, எல்லாவற்றுக்கும் மேலாக வேறு வழியின்றி அறிவிக்கப் பட்ட பண மதிப்பிழப்பால் நம் மக்கள் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவித்தது, பொறுத்துக் கொண்டது,, ,ஒரு 2000/- ரூபாய் மாற்றுவதற்கு பேங்க் வாசலில் கால் கடுக்க நின்றது -இதெல்லாம் சாதாரண விஷயம் இல்லை ,,,,,இவை எல்லாவற்றுக்கும் அவர் பதில் சொல்லித் தான் ஆக வேண்டும்,,
இவர்களை சிக்க வைக்க அப்போது சிறிது காலம் உள்துறை அமைச்சர் p சிதம்பரம் எந்த அளவுக்கு சதி முயற்சி செய்தார் என்று அனைவரும் அறிவார்கள். பல போலீஸ் அதிகாரிகளை மோடிக்கு எதிராக தயார் செய்து சாட்சியம் கொடுக்க செய்தார். குஜராத் முதல் அமைச்சர் ஆக இருந்த மோடி அவர்களை 10 முறைக்கு மேல் அழைத்து சிபிஐ விசாரணை நடத்தியது. ஆனால் ஒரு முறை கூட மோடி ஆஜர் ஆக மறுத்தது இல்லை. பெரிய கூட்டத்தினை அழைத்து கொண்டு போய் மாஸ் காட்டியது இல்லை. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். பிறகு சுப்ரீம் கோர்ட், தன் நேரடி கண்காணிப்பில் தனி சிறப்பு அதிகாரிகளை நியமித்து முழு விசாரணை நடத்தி இவர்கள் இருவரும் குற்றம் அற்றவர்கள் என்று கூறி விடுவித்தது.
அமித் ஷா சொல்வது முற்றிலும் உண்மை ..... சி.பி.ஐ., சோனியா, ப.சிதம்பரம் ஆகியோர் மோடியை அரசியலில் இருந்து அப்புறப்படுத்த பெரிதும் முயற்சி செய்தனர்.....
குஜராத் கலவர வழக்கையே ஒன்றுமில்லாமல் செய்தவர்களுக்கு இதெல்லாம் எம்மாத்திரம்?