ADVERTISEMENT
சுற்றுச்சூழலுக்கு இணக்கமானவை என்ற பட்டியலில் கண்ணாடியை சேர்க்கவே முடியாது. ஆனால், சீன அறிவியல் அகாடமியைச் சேர்ந்த விஞ்ஞானிகள், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பைத் தராத கண்ணாடியை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். உயிரி முறையில் பிரித்தெடுக்கப்பட்ட அமினோ அமிலங்கள் மற்றும் பெப்டைடுகளை, வேதியல் முறையில் திருத்தம் செய்து , உயர் வெப்பத்துக்குள்ளாக்கி, திடீரென அதிக குளிர்ச்சியூட்டி, புது வகை கண்ணாடியை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.
உயிரி,வேதியல் மற்றும் தட்பவெப்ப முறையில் உருவான கண்ணாடி, வழக்கமான கண்ணாடி போன்ற எல்லா தன்மைகளையும் கொண்டுள்ளது. ஆனால், இது எளிதில் மட்கும் என்பதோடு, மிகக் குறைந்த எரிசக்தி செலவில் இதை மறுசுழற்சியும் செய்ய முடியும்.
உயிரி மூலக்கூறுக் கண்ணாடி என அழைக்கப்படும் இந்த கண்ணாடி, வீடுகள் முதல் ஆய்வுக்கூடங்கள் வரை விரைவில் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!