சட்டசபையில் நேற்று நீர்வளத் துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்கு, அமைச்சர் துரைமுருகன் பதிலுரை வழங்கினார்.
துரைமுருகன் தொடர்ந்து பேசியதாவது: நானும், முதல்வரும், கவர்னர் அளித்த தேநீர் விருந்தில் பங்கேற்றோம். அப்போது கவர்னர், என் வயது குறித்து கேட்டார். அதற்கு முதல்வர், 'என் அப்பாவுடன் 53 ஆண்டுகள் கூடவே இருந்தவர்' என, என்னை பற்றி கூறினார்.

அப்போது, உதயநிதி அந்த பக்கம் அமர்ந்திருந்தார். நான் கவர்னரிடம், 'உதயநிதிக்கு ஒரு மகன் இருக்கிறான். அவருடன் நான்தான் இருப்பேன்' என்றேன். 'உங்களுடைய வயது என்ன?' என்று கவர்னர் கேட்டார். நான் உறுதியாக 100 வயதை கடப்பேன் என்று கூறினேன்.
'என்றைக்கும் வயது ஆகி விட்டது என நினைக்கக் கூடாது. இளமையாக இருக்க வேண்டும்' என கருணாநிதி சொல்வார். எனவே, நான் 100 வயது வரை நிச்சயமாக இருப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து (33)
துரைமுருகன் இடையே கடுமையான போட்டி.....
மனமில்லாத குடும்பக்கோத்தடிமைகள் மற்றவர்களை அடிமைகள் என்று கேலி செய்வதுதான் உலகமகா போலித்தனம்.. அதிலும் இவர்கள் எல்லாம் சமூகநீதி சுயமரியாதை என்றெல்லாம் கூவுவதும் அதை மக்கள் நம்புவதும் தமிழ் மண்ணின் சாபக்கேடு.. போதையில் தள்ளாடும் தமிழன்.. அந்த பேனா தலைவர் ஒருமுறை தமிழர்கள் அனைவரையும் சோற்றால் அடித்த பிண்டங்கள் என்று சொன்னது இப்போது தான் சாலப்பொருந்துகிறது..
ஒருமுறை சஞ்சய் காந்தியின் செருப்பு விமானப் படிக்கட்டிலிருந்து கீழே விழுந்த போது மூத்த மத்திய அமைச்சர் கிடுகிடு என்று ஓடிப்போய் அதனை எடுத்து சஞசயின் காலில் அணிவித்து மகிழ்ந்தார். இதை சஞ்சய் ஏற்க மறுத்தபோது நான் உங்க தாத்தாவுக்கு அடிமையாக இருந்தவன். உங்கள் அம்மாவுக்கு அடிமையாக இருப்பவன். எனவே உங்களுக்கும் உங்கள் வாரிசுக்கும் கூட அடிமையாக இருப்பேன் என்று கூறி துவக்கி வைத்தது
தலைவன் என குறிப்பிட சொல்லியிருந்தால் இன்னும் பொருத்தமாக இருந்திருக்கும் .
சார். ஸ்டாலின் வசிப்பது கோபலபுரத்தில் இல்லை. அவர் வசிப்பது ஆழ்வார்பேட்டை. அப்படின்னா துரை , ஸ்டாலின் விசுவாசி இல்லையா? உதயநிதி விசுவாசி இல்லயாய?