ADVERTISEMENT
மாநில அளவில் சரியாக செயல்படாத 14 தென்மாவட்ட நிர்வாகிகளை களையெடுக்க பா.ஜ., மாநில தலைமை முடிவெடுத்துள்ளது.
2024ல் நடக்க உள்ள லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் எப்படியாவது கணிசமான வெற்றியை பெற மாநில பா.ஜ., தலைமை முடிவெடுத்துள்ளது. இதற்காக பல தீவிரமான நடவடிக்கைகளை அண்ணாமலை மேற்கொண்டு வருகிறார். கூட்டணியைப் பற்றி பொருட்படுத்தாமல், பலமான தொகுதிகளில் எம்.பி.,க்களை பெற்று தனது சக்தியை காட்டிவிட வேண்டும் என விரும்புகிறார்.

இதற்கான நடவடிக்கையில் சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகளை கூண்டோடு கலைத்தார். தற்போது மேலும் சில மாவட்டங்களில் களையெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளார். தென்மாவட்டங்கள் பலவற்றில் நிர்வாகிகளின் செயல்பாடுகள் சரியில்லை என தலைமை கருதுகிறது. ஏப்.,14ல் நடைபயணம் துவங்கப்போவதாக அறிவித்தவர், அதை நடைமுறைப்படுத்தும் முன் பல மாற்றங்களை நிகழ்த்த உள்ளதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
பூத் அளவில் கட்டமைப்பு வலுவாக இருந்தால்தான் தி.மு.க., போன்ற கட்சிகளை சமாளிக்க முடியும் என்பதால் இந்த மாற்றத்திற்கு தலைமை யோசித்துள்ளது. பல மாவட்டங்களில் பூத்கமிட்டிகளில் ஆட்களை இன்னும் அமைக்காமல் உள்ளனர்.
சில மாவட்டங்களில் அணிகள், பிரிவுகளின் நிர்வாகத்தில் மாவட்ட நிர்வாகிகள் தங்களுக்கு வேண்டியவர்களை நியமித்து அவர்களின் செயல்பாடுகளை கவனிக்காமல் உள்ளனர். உறுப்பினர் சேர்க்கை மந்தமாக உள்ள பகுதிகள், கட்சிக்கு புதியவர்களை கொண்டு வராதவர்கள் என நிர்வாகிகள் மீது அதிருப்தி நிலவுகிறது. மேலும் தென்மாவட்ட மாநில நிர்வாகிகள் சிலர் தனி ஆவர்த்தனம் செய்வதாகவும் தலைமை கருதுகிறது.
எனவே இப்போதே அதை சரிசெய்ய மாநில தலைமை முடிவெடுத்து தென்பகுதியில் 14 மாவட்டங்களில் நிர்வாகிகளை களையெடுக்க முடிவெடுத்துள்ளதாக கட்சியினர் பரபரப்பில் உள்ளனர்.
நமது நிருபர்
வாசகர் கருத்து (7)
பாஸ், 10 இடங்களில் ஜெயிக்கிறது இருக்கட்டும், கூட்டணிக் கட்சிகளிடம் 10 இடம் கேட்டு வாங்குனாலே பெரிய வெற்றிதான். அதுவரைக்கும் தாங்குவீங்களா? கர்னாடகா எலக்ஷன் வரை தாங்குவீங்கன்னு நினைக்கிறேன்.
கட்சியில் இருப்பதே கொஞ்சம் பேர்தான். அவங்களையும் கலையெடுக்கிறேன் நுரைஎடுக்கிறேன்னு சொல்லி கட்சியைவிட்டு நீக்கினா அப்புறம் கட்சியே இருக்காது.
பாஸ் இருக்கறதே 40 பேரு, நீங்க வேற
எத்தனை புது புது விடியோக்கள் வெளிவரப்போகுதோ? புது புது ஆடியோக்கள் கூட மக்கள் கவனத்துக்கு கொண்டு வரப்படும் என்று ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
இருக்கிற நாலுபேரையும் அனுப்பிவிட்டு கட்சியை கலைத்துவிட போக்கிரிறிர்களா?