ADVERTISEMENT
மாவட்டத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம், ஆத்துார் நீர்த்தேக்க திட்டம் என இரண்டு திட்டங்களில் அனைத்து பகுதி மக்களுக்கும் குடிநீர் சப்ளையாகிறது.
மூன்றாவது திட்டமான பேரணை திட்டம் முடங்கிய நிலையில் இந்தாண்டு கோடை துவக்கும் முன்பே மார்ச் முதல் வாரத்தில் குடிநீர் சப்ளை நேரம் குறைக்கப்பட்டு, தினமும் சப்ளையாகி வந்த குடிநீரானது இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மாற்றம் செய்யப்பட்டது.
மார்ச் இறுதியான தற்போது நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் சப்ளை ஆகிறது.இதனால் மாவட்டம் முழுவதும் குடிநீர் பிரச்னையானது தற்போதே தலை துாக்க துவங்கி உள்ளது.
பருவமழை தவறியதை காரணமாக கூறினாலும், குடிநீர் ஆணையத்திற்கு மாநகராட்சி சார்பில் செலுத்தப்படும் வரி நிலுவை பாக்கியாலும் குடிநீர் சப்ளை பாதிப்பு ஏற்படுகிறது.
தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், விடுதிகள்,ஓட்டல்கள் போர்வெல் அமைப்பை அதிக ஆழமாக பதித்திருப்பதால் நிலத்தடிநீரும் பரவலாக கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மழை காலத்தில் 30 நிமிடங்கள் மட்டுமே இயங்கும் நிலத்தடி நீருக்கான மின்மோட்டார்கள் தற்போது இரண்டு மணி நேரமாகியும் நீரை உறிஞ்ச திணறுவதால் மின்மோட்டார் பாதிப்பும் அதிகளவில் ஏற்படுகிறது.
குடிநீர் பிரச்னைக்கு தீர்வாக உள்ளாட்சிகள் தற்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
வாசகர் கருத்து (2)
கோதாவரி தண்ணீர் வந்துக்கிட்டே இருக்கு.2047 குள்ளே திறந்து வெப்பாரு.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
திண்டுக்கல் கரானுங்களுக்கு I. பெரியசாமி நல்ல முண்டுக்கல்லா தூக்கிப்போடுவாரு...