Load Image
Advertisement

மதுரை மாட்டுத்தாவணி மீன் வியாபாரிகளுக்கு நிரந்தர இடம் வேணும்

Madurai cattle and fish traders need a permanent place    மதுரை மாட்டுத்தாவணி மீன் வியாபாரிகளுக்கு  நிரந்தர இடம் வேணும்
ADVERTISEMENT
மதுரை, மார்ச் 30 - கரிமேடு மீன் மார்க்கெட் பகுதியில் போக்குவரத்து இடையூறு என்றுகூறி, மதுரை மாட்டுத்தாவணிக்கு தற்காலிகமாக மீன்மார்க்கெட் இடமாற்றப்பட்டாலும் நிரந்தரமாக எந்த வசதியும் இல்லை என்கின்றனர் மீன்வியாபாரிகள்.

கொரோனா தொற்றின் போது கரிமேடு மீன்மார்க்கெட் பகுதியில் வெளிமாவட்ட, வெளிமாநில வாகனங்கள் நீண்ட வரிசையில் வந்து சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதைக் காரணம் காட்டி தற்காலிகமாக மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் பின்பகுதி காலியிடத்திற்கு மீன்மார்க்கெட் மாற்றப்பட்டது. கேரள மாநிலம், ராமேஸ்வரம், பாம்பன், துாத்துக்குடியில் இருந்து கடல்மீன்களும் ஆந்திராவில் இருந்து வளர்ப்பு மீன்கள் உட்பட வாரம் 200 டன் மீன்கள் வரத்து கிடைக்கிறது.

இங்கிருந்து விருதுநகர், கோவில்பட்டி, திருச்சி வரை மீன்கள் அனுப்பப்படுகிறது. ஆந்திரா மீன்கள் இங்கிருந்து இன்ன பிற மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இத்தனை போக்குவரத்து இருந்தாலும் எந்த அடிப்படை வசதியும் இல்லாமல் மீன்மார்கெட் இயங்குவதாக மாட்டுத்தாவணி மீன்வியாபாரிகள் சங்க துணைச் செயலாளர் ராமனாதன் தெரிவித்தார்.

அவர் கூறுகையில்,'' தென்மாவட்ட மக்களின் மீன் உணவு தேவையை நாங்கள் பூர்த்தி செய்து வருகிறோம். பத்தாண்டுகளாக நிரந்தர இடமின்றி தவிக்கிறோம். இந்த இடத்தில் எவ்வளவு வாகனங்கள் வந்து சென்றாலும் போக்குவரத்து இடையூறு ஏற்படாது. மாநகராட்சி நிர்வாகம் இந்த இடத்தை நிரந்தர மீன் மார்கெட்டாக அறிவித்து கடைகள், குளிர்பதன கிட்டங்கி அமைத்து நவீனப்படுத்த வேண்டும்'' என்றார்.


வாசகர் கருத்து (1)

  • அப்புசாமி -

    எய்ம்ஸ் இடத்தைக் கேட்டுப் பாக்கலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement