ADVERTISEMENT
புதுச்சேரி : கொரோனா தொற்றால் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும் என அமைச்சர் தேனீஜெயக்குமார் அறிவித்துள்ளர்.
சட்டசபையில் மானிய கோரிக்கைக்கு பதிலளித்து அமைச்சர் தேனீ ஜெயக்குமார் வெளியிட்ட அறிவிப்பு:
மாற்றுதிறனாளிகள் நலத்திட்டங்கள் பெறுவதற்கான வருமான உச்ச வரம்பு நீக்கப்படுகிறது. கர்ப்பிணி மாற்றுதிறனாளிகளுக்கு 5,7,9 மாதங்களில் தலா 7 ஆயிரம் வீதம் மொத்தம் 21 ஆயிரம் வழங்கப்படும்.
மாநில, மண்டல, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் மாற்றுதிறனாளிகளுக்கு போக்குவரத்து படி வழங்கப்படும்.விளையாட்டு பொருட்களும் இலவசமாக வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளிகள், அந்தந்த பிராந்தியங்களில் உள்ள அரசு பஸ்சில் இலவச பயணம் மேற்கொள்ள பாஸ் வழங்கப்படும்.
மாற்றுதிறனாளிகள் மேம்பாட்டு கழகத்தில் பெற்ற கடனுக்கான வட்டி தள்ளுபடி செய்யப்படும்.
தற்போது 40 முதல் 65 சதவீதம் ஊனம் உள்ளோருக்கு வழங்கப்படும் உதவித் தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரமாகவும், 66 முதல் 85 சதவீதம் ஊனம் உள்ளோருக்கு ரூ.2,500ல் இருந்து ரூ.3,500 ஆகவும், 86 முதல் 100 சதவீதம் ஊனமுள்ளோருக்கு ரூ. 3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.
கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த 13 குழந்தைகள் மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்த 416 குழந்தைகளுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது சம்மந்தமாக ஆலோசிக்கப்படும்.
கொரோனா தொற்றால் பெற்றோரில் ஒருவரை இழந்த 416 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.
ஆதரவற்ற குழந்தைகளுக்கு வேலை மற்றும் உயர் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்க குழு அமைக்கப்படும்.
மண்பாண்ட தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும். ஏம்பலம், வில்லியனுாரில் பிற்படுத்தப்பட்ட அரசு பெண்கள் விடுதி துவங்கப்படும். சலவை தொழிலாளர்களுக்கு மரத்திலான கைவண்டி இலவசமாக வழங்கப்படும்.
இணைய தளங்களில் பெண்களுக்கு எதிராக அவதுாறு பரப்புவோரை கண்டுபிடிக்க மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் உள்ள பகுதிகளுக்கு அருகில் பணிபுரியும் பெண்களுக்காக, பெண்கள் குழந்தைகள் தங்கும் விடுதியும், கல்லுாரி அருகில் மாணவியர் விடுதி மத்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்படும் கடத்தலில் மீட்கப்பட்ட பெண்கள் தங்குவதற்கு உஜ்வாலா திட்டத்தின் கீழ் இல்லங்கள், மத்திய அரசு நிதியுதவிடன் அமைக்கப்பட உள்ளது.
பெண்களுக்கான ஸ்டார்ட் அப் ஹப் திட்டம் அமைக்க சிட்பி மூலம் ரூ.500 கோடி நிதி கிடைக்க ஆவணம் செய்யப்படும்.
பாதுகாப்பற்ற இடங்கள் என்று கண்டறியப்படும் இடங்களில் பெண்களின் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கேமரா பொருத்தவும் ,ஸ்மார்ட் போலீஸ் பூத் அமைக்கப்பட உள்ளது.
மத்திய அரசின் உதவியுடன் 60 அங்கன்வாடிகளின் தரத்தை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. காலியாக உள்ள அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
மகளிர் மற்றும் மாற்றுதிறனாளிகள் மேம்பாட்டு கழகம் மூலம் பெண்கள் வர்த்தக ஊக்குவிப்பு மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!