சென்னை: மின் வாரியத்தில் நேற்று முன்தினம் மட்டும், 45 ஆயிரம் பேர் விடுப்பு எடுத்துள்ளனர்.
தமிழக மின் வாரியத்தில் பல்வேறு பதவிகளில், 90 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். அவர்கள், கட்சி மற்றும் கட்சி சாராத தொழிற்சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளனர்.
நேற்று முன்தினம், 15 சங்கங்களை உள்ளடக்கிய கூட்டுக் குழு சார்பில், காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை அண்ணா சாலையில் பேரணி நடந்தது. அதில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பங்கேற்றனர்.

வேலைக்கு வராதவர் விபரம் தருமாறும், அவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யுமாறும், பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் கணக்கெடுத்ததில், நேற்று முன்தினம் மட்டும் 45 ஆயிரம் பேர் வேலைக்கு வராமல் விடுப்பு எடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.
விடுப்பை பயன்படுத்தினால் தப்பா?
வேலை நிறுத்த போராட்டம் நடத்தினால் தான் சம்பளம் பிடித்தம் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஊழியரும், தனக்கு உள்ள விடுப்பை எடுத்து தான் பேரணியில் பங்கேற்றனர். எனவே, சம்பளம் பிடித்தம் செய்யக் கூடாது.
-தொழிற்சங்க நிர்வாகிகள்
வாசகர் கருத்து (8)
தினமும் கரண்ட் CUT ஆகுது. கேட்டா TRIP ஆய்டுச்சுன்னு சொல்ராங்க ஆனா கரண்ட் அவரது போகுது பசங்களுக்கு எக்ஸாம் TIME இப்படி பண்ணின எப்படி அதும் இந்த வெயில் ரொம்ப கொடுமையை இருக்கு. AE போன் பண்ண எடுக்க மாட்டேன்றாங்க எங்க நீங்க எங்களுக்கு ஓசில ஒன்னும் கரண்ட் சப்ளை பண்ணலேங்க. ஒழுங்கா உங்க வேலைய வாங்கற சம்பலுத்து வேல பாருங்க. இப்படி மக்கள் வரி பணத்தை வேஸ்ட் பண்ணாதீங்க
தினமும் ,,,,,,
முதலில் தமிழக மின்வாரியத்தை, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுசெல்லவேண்டும். தமிழக மின் பகிர்மானத்தை நான்காக பிரிக்கவேண்டும். மின் உற்பத்தி, உற்பத்தி நிலையத்திலிருந்து முக்கிய பிரிவுக்கு மின் மாற்றம், முக்கிய பிரிவிலிருந்து உள்ளூருக்கு மின் மாற்றம், உள்ளூரிலிருந்து தனி தனி வீடு / அலுவலகங்களுக்கு மின் மாற்றம். இவற்றை தனி தனியாக தனியாருக்கு தந்துவிட வேண்டும். உள்ளூர் பராமரிப்பையும் (மின்கம்ப பழுது / மின் லைன் பழுது / மின்மீட்டர் பழுது / மின்மாற்றி பழுது / நிலைய பராமரிப்பு உட்பட) தனியாருக்கு பிரித்து தரவேண்டும். மின் மீட்டர்களை, டிஜிட்டல் மீட்டர்களாக மாற்றி, முந்தய மாதத்தின் மின் உபயோகம் / அதன் கணக்கீடு மற்றும் செலுத்தவேண்டிய கட்டணத்தை தானே டிஜிட்டலில் கணக்கிட்டு, அடுத்த மாதத்தின் முதல்நாளில் சம்பந்தப்பட்டவரின் செல்போனுக்கு குறுஞ்செய்தியாக செல்லவேண்டும். ஒவ்வொரு உள்ளூர் மின் நிலையத்தில் மட்டும், அரசை சார்ந்த சில பொறியாளர் மட்டும் சுழற்சி அடிப்படையில் இவற்றை கண்காணிக்க பணியில் இருந்தால் போதும். இவற்றையெல்லாம் செய்துவிட்டு, பின்னர் மின்வாரியத்தின் சிறந்த செயல்பாடு மற்றும் கோடானு கோடி ரூபாய்கள் அரசுக்கு மிச்சமாவதை கண்கூடாய் பார்த்துவிட்டு பின்னர் சொல்லுங்கள்.
விடியல் கொடுகிராரு விடியா மூஞ்சி இருபத்தி மூனாம் புலிகேசி... ஸ்வீட் எடு கொண்டாடு...
மும்பாய் சென்று பாருங்கள். அங்கு பிரைவேட் மின்சார சேவை. (டாடா, அதானி,...). பவர் கட்டே கிடையாது...சீரான மின்சாரம்...ஸ்டெபிலைசரே அவசியமில்லை. அவ்வளவு பெரிய நகரத்திற்கு எப்படி கொடுக்கிறார்கள் என்று பாருங்கள்.