பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
தமிழகத்தில், 2022 டிசம்பர் 29ல், கவுன்சிலிங் வாயிலாக பல்வேறு பள்ளிகளில் பணி அமர்த்தப்பட்ட, 150 ஆசிரியர்களுக்கு இன்று வரை சம்பளம் வழங்கப்படவில்லை. பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களின் விபரங்கள், ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை முறையில் பதிவேற்றம் செய்யப்படாதது தான், அனைத்து சிக்கல்களுக்கும் காரணம்.
உதயநிதிக்கு அமைச்சர் பதவி கொடுப்பதில் காட்டிய வேகத்தை, இந்த ஆசிரியர்கள் விஷயத்துலயும் காட்டியிருக்கலாமே!
பா.ஜ., சிறுபான்மையினர் அணி தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் பேட்டி:
தமிழகத்தில், அ.தி.மு.க.,வுடன் பா.ஜ., கூட்டணி தொடர்கிறது. இருந்த போதும், பா.ஜ.,வை தமிழகத்தில் சொந்தக் காலில் வழிநடத்த, மாநில தலைவர் அண்ணாமலை அனைத்து கட்டமைப்புகளையும் வலுப்படுத்தி வருகிறார்.
சொந்தக் காலில் நிற்க போறீங்க என்றால், அ.தி.மு.க., என்ற முதுகில் இருந்து கீழே இறங்க போறீங்க என்று தானே அர்த்தமாகுது!
தமிழக பா.ஜ., செயலர் அஸ்வத்தாமன் அறிக்கை:
என்.எல்.சி.,க்காக, 2000வது ஆண்டில் எடுக்கப்பட்ட நிலங்களுக்கு, சம அளவிலான இழப்பீடு தொகையாக, அனைவருக்கும், 25 லட்சம் ரூபாய் அளிக்க வேண்டும். நிலம் எடுப்பு தொடர்பாக, கடலுார், பெரம்பலுார் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட கிராமங்களுடைய பிரதிநிதிகளை உள்ளடக்கிய குழு அமைத்து, பேச்சு நடத்தி, உரிய தீர்வு காண வேண்டும்.
என்.எல்.சி., மத்திய அரசின் நிறுவனம் தானே... பா.ஜ.,வினர் டில்லியில பேசி இதற்கெல்லாம் உரிய நடவடிக்கை எடுக்கலாமே!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை பேட்டி:
சட்டசபையில் சமீப காலங்களில், சட்ட முன்வடிவுகள் விரிவாக விவாதிக்கப்படுவதில்லை. எம்.எல்.ஏ.,க்களுக்கு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்து விவாதிக்க வாய்ப்பு கொடுத்து, சட்டம் நிறைவேற்றப்பட்டால், கவர்னர் மேலும் விபரங்கள் கேட்டு, காலதாமதம் செய்யவோ, திருப்பி அனுப்ப வேண்டிய அவசியமோ இருக்காது.
அப்படி செய்வதன் வழியே, கவர்னருக்கு அரசியலமைப்பு சட்டம் பிரிவு, 200ன்படி அளிக்கப்பட்டிருக்கிற அதிகாரம், விவாதப் பொருளாகாது. நியாயமான கோரிக்கை தான்... ஆனா, ஆளுங்கட்சி செவிமடுக்கணுமே!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 4 தேர்வில், 5 லட்சத்துக்கும் அதிகமானோர், கட்டாயத் தமிழ் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். அவர்கள் முடிவுகள் வெளியிடப்படவில்லை என, டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தரமான கல்வியை இதுநாள் வரை கொடுக்கவில்லை என்பதை தெளிவுபடுத்துகிறது. 5 லட்சம் பேர் தமிழ் பாடத்தில் தோல்வி என்ற செய்தி, தமிழகத்தில் தமிழ் பயிற்று விக்கும் தரத்தை, தமிழ் மொழியை திட்டமிட்டு அழித்ததை வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது.
இந்த விவகாரத்தில், தி.மு.க., அரசுக்கு மட்டுமில்லை... அதற்கு முன்பிருந்த, அ.தி.மு.க., ஆட்சியாளர்களுக்கும் பங்கிருக்கு!
திருட்டு ஒன்கொள் திராவிடர்கள் தமிழ் தைல் என்பது தமிழனை ஏமாற்றி ஓட்டுகளை வாங்கத்தான் தவிர தமிழை வளர்க்க அல்ல...அவர்கள் விரட்டி அடிக்க பட வேண்டியவர்கள்....