Load Image
Advertisement

கர்நாடகத்திற்கு அடுத்த முதல்வர் யார் மே 14ல் என தெரியும்

karnataka polls will be held in single phase on may 10, results on May 13 கர்நாடகத்திற்கு அடுத்த முதல்வர் யார் மே 14ல் என தெரியும்
ADVERTISEMENT
பெங்களூரு : கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10ம் தேதி ஒரே கட்டமாக நடத்தப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. மே 13ம் தேதி ஓட்டுகள் எண்ணப்படுகின்றன. இதற்கு அடுத்த நாளான மே 14ல், கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பது தெரியவரும். மாநிலம் முழுதும் நேற்றே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. முறைகேடுகளை தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மைதலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இந்த ஆட்சி மே 24ம் தேதியுடன் நிறைவு பெறுவதால், இதற்கு முன்னதாக புதிய சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். இந்நிலையில், மதசார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சியினர், முதல் கட்ட வேட்பாளர்களை அறிவித்து தேர்தல்பணிகளை ஏற்கனவே துவக்கி விட்டனர். பா.ஜ., இன்னும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கவில்லை.

தீவிர பிரசாரம்



இதற்கிடையே, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் மற்றும் மாநில தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமார் நேற்று புதுடில்லியில் கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்து கூறியதாவது:தற்போதைய கர்நாடகா சட்டசபையின் பதவிக்காலம், மே 24ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில், எஸ்.சி., பிரிவினருக்காக 36 தொகுதிகளும், எஸ்.டி., பிரிவினருக்காக 15 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.இறுதி வாக்காளர் பட்டியல்படி, பொது வாக்காளர்கள் ஐந்து கோடியே 23 லட்சத்து 63 ஆயிரத்து 948 பேர், தபால் வாக்காளர்கள் 47 ஆயிரத்து 609 பேர் என, மொத்தம் ஐந்து கோடியே 24லட்சத்து 11 ஆயிரத்து 557 வாக்காளர்கள் உள்ளனர்.

இதில், ஒன்பது லட்சத்து 58 ஆயிரத்து 806 இளம் வாக்காளர்களும், ஐந்து லட்சத்து 60 ஆயிரத்து 908 மாற்றுத்திறனாளி வாக்காளர்களும், 4,751 திருநங்கையரும், 80 வயது கடந்த 12 லட்சத்து 15 ஆயிரத்து 142 வாக்காளர்களும் உள்ளனர்.ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் அதிகபட்சமாக 1,500 ஓட்டுகள் பதிவாகும் விதமாக, மாநிலம் முழுதும் 58 ஆயிரத்து 282 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படும்.

மாற்றுத் திறனாளிகளுக்கான ஓட்டுச் சாவடிகள், மகளிர் ஊழியர்கள் மட்டுமே நிர்வகிக்கும் சிறப்பு ஓட்டுச்சாவடிகள், மலை வாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் சிறப்பு ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படும்.பெங்களூரு நகரில் கடந்த முறை குறைவான ஓட்டுப்பதிவு நடந்து உள்ளது.இதை உயர்த்துவதற்கு போதுமான விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.'சிவிஜில்' எனும் மொபைல் செயலியில், தேர்தல் முறைகேடுகள் குறித்து பொது மக்கள் படம் எடுத்து அனுப்பலாம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுப்பர்.அனைத்து வேட்பாளர்களின் பிரமாண பத்திரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். தேர்தல் முறைகேடுகளை தடுக்கும் வகையில், 19 மாவட்டங்கள் மற்றும் மாநில எல்லைப் பகுதிகளில், 171 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வேட்பு மனு தாக்கல்



ஏப்ரல் 13ம் தேதி வேட்பு மனு தாக்கல் ஆரம்பமாகிறது. மனுக்கள் தாக்கல் செய்ய, ஏப்ரல் 20ம் தேதி கடைசி நாள். ஏப்ரல் 21ல் மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. மனுக்கள் வாபஸ் பெறுவதற்கு, ஏப்ரல் 24ம் தேதி கடைசி நாள். மே 10ல் ஓட்டுப்பதிவு நடக்கும். மே 13ல் ஓட்டுகள் எண்ணப்படும். மே 15ம் தேதி தேர்தல் நடைமுறைகள் நிறைவு பெறும். கர்நாடக சட்டசபைக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், மாநிலத்தில் உடனடியாக தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இது தேர்தல் திருவிழா. வாக்காளர்கள் தவறாமல் ஓட்டளிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். அரசியல் கட்சியினர் ஓட்டு போடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில், அரசியல் கட்சியினரிடையே பரபரப்பு அதிகமாகி உள்ளது.பிரசாரத்துக்கு தயாராவது, தேர்தல் வாக்குறுதிகள் தயாரிப்பது, பொதுக் கூட்டங்கள் நடத்துவது, இறுதி வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணிகளில் கட்சித் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வீட்டில் இருந்தே ஓட்டு போடலாம்

இந்தியாவில் முதல் முறையாக, வீட்டில் இருந்தே ஓட்டு போடும் வசதி, கர்நாடகா சட்டசபை தேர்தலில் அறிமுகப்படுத்தப்படுகிறது. 80 வயதுக்கு மேற்பட்டோர், 40 சதவீதம் அளவுக்கு உடலில் குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளிகள் இந்த வசதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.தேர்தல் அதிகாரிகள் முதலில் இவர்களின் வீடுகளுக்குச் சென்று விண்ணப்பம் வழங்கி ஒப்புதல் பெறுவர்.ஓட்டுப்பதிவுக்கு ஐந்து நாட்களுக்கு முன், இந்த வாக்காளர்களின் வீடுகளுக்கு ஓட்டுப் பெட்டி எடுத்துச் செல்லப்பட்டு, தபால் ஓட்டு போடுவதற்கு வசதி செய்யப்படுகிறது.



தேர்தல் அட்டவணை


வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் : ஏப்ரல் 13
மனு தாக்கலுக்கு கடைசி நாள் : ஏப்ரல் 20
மனுக்கள் பரிசீலனை : ஏப்ரல் 21
மனுக்கள் வாபஸ் பெற கடைசி நாள் : ஏப்ரல் 24
ஓட்டுப்பதிவு நாள் : மே 10
ஓட்டு எண்ணிக்கை : மே 13
தேர்தல் நடைமுறை நிறைவு : மே 15



வாசகர் கருத்து (8)

  • DVRR - Kolkata,இந்தியா

    பாவம்??? ராகுல் காந்தி என்னும் ராவுல் வின்சி என்னும் பப்புவிற்கு தயவு செய்து கர்னாடக முதல்வர் பதவி கொடுக்கவும்???அவர் பதவி இழந்து தவிக்கின்றார்???இந்து எதிர்ப்பு ஸ்டாலின் - டாஸ்மாக்னாடு, கேரளா - பின்னர் ஆயி முஸ்லிம் மருமகன் மாமனார் விஜயன், தெலங்கான - முஸ்லிம் சந்திரசேகர், ஆந்திரா - க்ரித்துவ ஜெகன் மோஹன் ரெட்டி???வெளங்கிடும் அந்த அந்த மானிலம் பிறகு இந்த மாதிரி உள்ள இந்திய நாடு

  • பச்சையப்பன் கோபால் புரம் -

    ஏற்க்கெனவே சூரத்தில் சங்கு ஊதப்பட்டு விட்டது சங்கிகளுக்கு!!! அதன் தொடர்ச்சி கர்நாடகத்தில் எதிரொலிக்கும்.தூங்கும் சிங்கத்தை இடறி விட்டு விட்டார்கள் சங்கிகள்.

  • KV Pillai - Chennai,இந்தியா

    பா ஜ க வுக்கு காங்கிரஸ் போல பிரச்சினை ஏதுமில்லை நிம்மதியாக இருக்கலாம். காங்கிரசுக்கு அடுத்த சிக்கல் - மூன்று பேர் முதல்வர் கனவில் இருக்கிறார்கள், அதை முடிவு செய்ய வேண்டுமே.

  • தமிழ் -

    கர்நாடகாவில் பிஜேபி க்கு இந்தமுறை சங்குதான்.

  • Ellamman - Chennai,இந்தியா

    ஜனார்த்தன ரெட்டி வேற குறுக்கு சால் போடுகிறார். பி ஜெ பி வயிற்றில் டன் கணக்கில் புளி கரைகிறதாம். வெளிவரும் கருத்து கணிப்பு வேற சொல்லிக்கொள்ளும்படியே இல்லயாம். 40% என்ற ஒற்றை சொல் தேர்தல் முடிவுகளை இப்போதே தீர்மானித்து விட்டதாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்