காந்தி சிலை மீண்டும் சேதம்: இந்தியா கடும் கண்டனம்
டொரன்டோ:கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள், ஒரே வாரத்திற்குள் இரண்டாவது முறையாக மஹாத்மா காந்தி சிலையை சேதப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வடஅமெரிக்க நாடான கனடாவின், பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் சைமன் பிரேசர் பல்கலை உள்ளது. இங்குள்ள காந்தி சிலையை, காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் நேற்று முன் தினம் சேதப்படுத்தினர்.
இந்த சம்பவத்துக்கு இந்திய துாதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 'இந்த அட்டூழியச் செயலை செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தியுள்ளது. இதையடுத்து, அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மார்ச் 23ல், கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள ஹாமில்டன் நகரில் இருந்த மஹாத்மா காந்தி சிலையை, காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்திய நிலையில், ஒரு வாரத்திற்குள் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஏற்கனவே, கடந்தாண்டு ஜூலையில் டொரன்டோவில் உள்ள காந்தி சிலையை, காலிஸ்தான் ஆதரவாளர்கள் சேதப்படுத்தினர். இது தவிர, கனடாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஹிந்து கோவில்கள் மீதும் அவர்கள் தாக்குதல் நடத்தி சேதப்படுத்தி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!