Load Image
Advertisement

பிரதமரே! ஊழலுக்கு எதிரானவர் போல காட்டுவதை நிறுத்துங்கள்: மல்லிகார்ஜூன கார்கே

Stop image makeover by calling yourself anti-corruption crusader: Kharge attacks PM Modi பிரதமரே! ஊழலுக்கு எதிரானவர் போல காட்டுவதை நிறுத்துங்கள்: மல்லிகார்ஜூன கார்கே
ADVERTISEMENT
புதுடில்லி: பிரதமர் மோடி ஊழலுக்கு எதிரானவர் போல காட்டிக்கொள்வதை நிறுத்த வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி அவர்களே, அதானியின் ரூ.20,000 கோடி மதிப்பு உள்ள ஷெல் நிறுவனங்களின் சொந்தக்காரார் யார்? லலித் மோடியா? நீரவ் மோடியா? மெஹூல் சோக்சியா? விஜய் மல்லையாவா? ஜெடின் மேதாவா? "ஊழல் பிரசாரத்தை விரட்டுவோம் திட்ட" உறுப்பினர்களா? நீங்கள் தான் அந்த கூட்டணியின் தலைவரா? உங்களை நீங்களே 'ஊழலுக்கு எதிரானவர்' போல காட்டிக்கொள்வதை நிறுத்துங்கள். முதலில் உங்கள் மனசாட்சியிடம் கேளுங்கள்.

கர்நாடகாவில் உங்கள் அரசு 40 சதவீத கமிஷன் அரசு என்று குற்றம் சாட்டப்படுவது ஏன்? மேகாலயாவின் நம்பர் ஒன் ஊழல் அரசில் நீங்கள் ஏன் அங்கம் வகிக்கிறீர்கள்?
Latest Tamil News

ராஜஸ்தானில் சஞ்சீவனி கூட்டுறவு ஊழல், மத்திய பிரதேசத்தில் போஷன் ஊழல், சத்தீஸ்கரில் என்.ஏ.என்., ஊழல் ஆகியவற்றில் பா.ஜ., தலைவர்களுக்கு தொடர்பில்லையா? 95 சதவீத எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு. ஆனால் பா.ஜ.,வில் உள்ள தலைவர்கள் எல்லாம் வாஷிங் மிஷின் மூலம் சுத்தம் செய்யப்பட்டவர்களா?

உங்களுக்கு (பிரதமருக்கு) திராணி இருந்தால், பார்லி., கூட்டுக்குழுவை அமைத்துவிட்டு, 9 ஆண்டுகளில் முதல் முறையாக ஒரு வெளிப்படையான செய்தியாளர்கள் சந்திப்பை நடத்துங்கள் பார்ப்போம். இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.


வாசகர் கருத்து (43)

  • எவர்கிங் -

    ...அவ்வப்போது காட்டிக் கொள்வதை நிறுத்து.

  • Nagarajan D - Coimbatore,இந்தியா

    உண்மையை சொன்னா உமக்கு ஏன் வலிக்குது? அவர் என்ன சோனியா குடும்பம் ஊழலுக்கு மட்டுமே வாழும் குடும்பம் என்றா சொன்னார்.. அவருக்கு தன்னை பற்றி நன்றாக தெரியும்... அவரை பற்றி மக்களுக்கும் தெரியும்... உன் கம்பெனி முதலாளி குடும்பம் பற்றியும் நன்றாக தெரியும்... உன் விசுவாசத்தை அந்த குடும்பத்தை பார்த்தால் வால் ஆட்டுவதோடு நிறுத்திக்கொள்... இல்லை என்றால் எலும்பு துண்டு போடுவதை அதுகள் நிறுத்திவிடும்

  • Jai -

    இவர் ஒரு டம்மி தலைவர். தற்போது கர்நாடகாவில் எலக்சன் நடப்பதால் இவரை பேச சொல்லி கொஞ்சம் சேர்த்து ஓட்டு கிடைக்குமா என்று பார்க்கிறார்கள். இதுவரைக்கும் இவரு எந்த அறிக்கையும் விடவில்லை. கர்நாடக எலக்சன் ஆரம்பித்த உடன் இப்படி ஒரு திடீர் காங்கிரஸ் தலைவரானார், எலக்சன் முடிந்தவுடன் மறுபடியும் டம்மி பீஸ் ஆவார்

  • அருணா -

    ஊழல் மட்டும் செய்ப்வருக்கு உண்மை கூட ஊழலாகத்தான் தெரியும் பல வருடம் ஆட்சியில்இல்லாமல் டென்ஷன்

  • பைரவர் சம்பத் குமார் -

    1). சோனியா காந்தி உலகில் மூன்றாவது பெரிய பணக்காரர் என்று வெளிநாட்டு ஊடங்கங்கள் வரிந்து கொண்டு எழதுகின்றனர்.2). சோனியா காந்தி எப்படி ஒரு தொழிலும் செய்யாமல் இவ்வளவு பெரிய பணக்காரர் ஆனார் என்று மல்லிகார்ஜுர் காரு சற்று விளக்கமாக கூறினால் பரவாயில்லை.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்