Load Image
Advertisement

கொலை முயற்சி வழக்கில் சிறை தண்டனை: லட்சத்தீவு எம்.பி முகமது பைசலின் தகுதி நீக்கம் ரத்து

புதுடில்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் லட்சத்தீவு எம்.பி., முகமது பைசல் தகுதி நீக்கத்தை லோக்சபா செயலகம் ரத்து செய்தது.

Latest Tamil News


லட்சத்தீவு தொகுதி எம்.பி., ஆக இருப்பவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முகமது பைசல். 2009 லோக்சபா தேர்தலின் போது முன்னாள் மத்திய அமைச்சர் பிஎம் சயீத் மருமகன் முகமது சலியா என்பவரை கொலை முயற்சி செய்ததாக முகமது பைசல் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை விசாரித்த கவரட்டி செசன்ஸ் நீதிமன்றம் முகமது பைசல் குற்றவாளி என உறுதி செய்ததுடன், 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது.

Latest Tamil News

சமீபத்தில் 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி, முகமது பைசலை எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக லோக்சபா செயலகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் முகமது பைசல் வழக்கு தொடர்ந்ததையடுத்து, 10 ஆண்டு சிறை தண்டனைக்கு கேரளா ஐகோர்ட் தடை விதித்தது. இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் லட்சத்தீவு எம்.பி., முகமது பைசல் தகுதி நீக்கத்தை இன்று(மார்ச் 29) லோக்சபா செயலகம் ரத்து செய்தது.


வாசகர் கருத்து (11)

  • MARUTHU PANDIAR - chennai,இந்தியா

    நம்ம ரவுலும் நல்ல மனசு பண்ணி மேல் கோர்ட்டுகளில் அப்பீல் செஞ்சா நல்லது சாமீ அவுரையும் இது போல இல்லாம கடும் எச்சரிக்கை கொடுத்து மன்னிக்கலாம். எம்.பி பதவி தப்பிக்கும். அரசுபங்களாவையும் காலி செய்ய வேண்டாம். ஆளும் அரசுக்கும் பின்னடைவு இல்லாம இருக்கும். கர்நாடகா ரொம்ப இடிக்கும் பல இருக்கே? ஏற்கனவே 75 எம்.எல்.ஏ அங்க இத்தாலி பார்ட்டி கையில வெச்சிருக்கே? அதோடு கூட ஆளும் கட்சி உறுப்பினர் கடுமையான ஊழல் குற்றச்சாட்டில் "உள்ளே" இருக்காப்ல கும்.. சாமி வேற இத்தாலி கூட சேருவார் போல இருக்கு++++பா.ஜ கடும் நெருக்கடியில் உள்ளதே? தகுதி நீக்க மேட்டர வெச்சு என்கேஷ் பண்ணி ஜனங்களை ஏமாத்திப்புடுவாங்களே? என்ன சோதனையோ ங்கறாங்க.

  • Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா

    கொலை முயற்சி குற்றவாளிக்கு பதவி ரத்து நீக்கம், ஆனால் அவதூரு வழக்கில் பதவி பறிப்பு

  • GMM - KA,இந்தியா

    செஷன்ஸ் நீதிமன்றத்தில் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட பின் கேரளா உயர் நீதிமன்றம் தடை விதிக்க காரணம்? மத்திய அரசு நீதிமன்ற நடவடிக்கையில் முழுவதும் விலகி இருப்பது பெரும் குழப்பம் ஏற்படுத்தி விடும். இதனை தடுக்க வேண்டும். இஷ்டம் போல் நடந்து கொள்வதால், சில நீதிபதிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டிய கட்டாயம்? அரசியல் சாயம் பூசுவர். துணிந்து முடிவு செய்ய வேண்டும்.

  • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

    அப்போ இதை முன் காட்டி பப்புவும் திரும்ப எம்.பி பதவியைப்பெற வாய்ப்புகள் உண்டோ என்னே குருவாயூரப்பா நடப்பது நாடகமா அல்லது நாட்டியமா நீதிமன்றங்கள் குறுக்கிட்டால் வந்த விபரீதம் அவதிப்படுவது மக்களே

  • vadivelu - thenkaasi,இந்தியா

    காங்கிரசில் யாராவது ஒருவர் அப்படி ராஹுலுக்காகவும் அப்பீல் செய்யலாமே.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்