Load Image
Advertisement

ஆன்லைன் வணிக பரிவர்த்தனை: ரூ.2 ஆயிரத்திற்கு மேலான தொகைக்கு கட்டணம் வசூலிக்க பரிந்துரை

சென்னை: வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் யுபிஐ எனப்படும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை 2000 ரூபாய்க்கு மேல் செய்தால், கட்டணம் வசூலிக்க என்பிசிஐ (தேசிய கொடுப்பனவு கழகம்) பரிந்துரைத்துள்ளது. இது வணிக ரீதியிலான பரிவர்த்தனைக்கு மட்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest Tamil News

இந்தியாவில் பெரும்பாலான நகரங்களில், யுபிஐ மூலம் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்தி, மக்கள் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை செய்து வருகின்றனர். சில்லறை வணிக கடைகள் முதல் பெரிய கடைகள் வரை பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுவதற்கு ஆன்லைன் செயலிகள் பயன்படுகின்றன.

இதனால் ரூபாய் நோட்டுகள் பயன்பாடு குறைந்து வருகிறது. மேலும் பேடிஎம், கூகுள் பே, போன் பே உள்ளிட்ட பணப் பரிவர்த்தனை செயலிகளை கிராமங்கள் உட்பட பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் யுபிஐ எனப்படும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை 2000 ரூபாய்க்கு மேல் செய்தால், கட்டணம் வசூலிக்க என்பிசிஐ (தேசிய கொடுப்பனவு கழகம்) பரிந்துரை செய்துள்ளது. இது வணிக ரீதியிலான பரிவர்த்தனைக்கு மட்டும் பொருந்தும் எனவும் அறிவித்துள்ளது.

Latest Tamil News

அதன்படி, சிறிய கடைகளில் ரூ.2,000க்கும் அதிகமான தொகை பணப்பரிமாற்றம் செய்தால், 1.1 சதவீதம் கட்டணமும், அரசு நிறுவனங்கள் மற்றும் ரயில்வே பணப்பரிமாற்றங்களுக்கு 1 சதவீதம் கட்டணமும், பல்பொருள் அங்காடி 0.9 சதவீதமும், தொலைத்தொடர்பு அஞ்சலகம், கல்வி, வேளாண்மை, ரியல் எஸ்டேட் போன்ற பணப்பரிவர்த்தனைகளுக்கு 0.7 சதவீதமும், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை பணப்பரிவர்த்தனைக்கு 0.5 சதவீதம் கட்டணம் வசூலிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

விளக்கம்



பே டிஎம் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: யுபிஐ பரிவர்த்தனைக்கோ, 'வாலட்' பேமண்ட்டுக்கோ எவ்வித கூடுதல் கட்டணமும் வாடிக்கையாளர்கள் செலுத்த தேவையில்லை; மொபைல் பேமெண்ட் தொடர்ந்து நம் பொருளாதாரத்தை முன்னெடுத்துச் செல்லும் எனக்கூறப்பட்டு உள்ளது.



வாசகர் கருத்து (34)

  • ஆரூர் ரங் -

    இது ஒரு பரிந்துரை மட்டுமே.. வாடிக்கையாளர்கள் எவ்வித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை. ஒரு முறை ஒரு வாடிக்கையாளர் 2000 க்கு மேல் பரிமாற்றம் செய்தால் கடைக்காரர்தான் ஒரு சதவீதக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். UPI வந்த பிறகு மணியார்டர், டிராப்ட் மூலம் கிடைத்துக் கொண்டிருக்கும் வருமானம் மிகவும் குறைந்துவிட்டது. பாதுகாப்பான மென்பொருள் மூலம் பணப் பரிமாற்றம் மிகவும் செலவு பிடிக்கக் கூடியது. வணிகர்களிடம்தானே வசூலித்து செலவை ஈடுகட்ட இயலும்?😇நிரந்தர ஓஷி எதிர்பார்ப்பவர்கள் பொன் முடியை அணுகவும்.

  • அப்புசாமி -

    000

  • Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா

    அவசரப்பட்டு கொதிக்க வேண்டாம். டெபிட் கார்டு மூலம் நடைபெறும் பண பரிமாற்றத்திற்கு 2% வரை வியாபார நிறுவனங்களிடம் வங்கிகள் கட்டணம் பெறுகின்றன. UPI மூலம் இலவசம் என்பதால் நிறுவனங்கள் டெபிட் கார்டுகளை தவிர்க்க துவங்கின. இதனால் வங்கிகளின் வருமானம் குறைய துவங்கியது. இதை ஈடுகட்டவே இந்த புதிய நடைமுறை. இனி 1999 ரூபாய்க்கு அதிகமாக UPI மூலம் பணம் பெறும் நிறுவனங்கள் 1.1% வங்கி கட்டணம் செலுத்த வேண்டும். இந்த வருவாயை UPI நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் பங்கிட்டுக்கொள்ளும். UPI நிறுவனங்கள் இனி விற்பனை நிறுவனங்களிடம் இருந்து இஷ்டத்திற்கு கமிஷன் கேட்க முடியாது. இந்த புதிய நடைமுறையில் பொருள் வாங்கும் பொதுமக்களுக்கு எந்த கட்டணமும் இல்லை. வியாபாரிகளுக்கும் கட்டணம் வெறும் 1.1% என்ற அளவிற்குள் கட்டுப்படும். எல்லாமே இலவசம் என்று என்றுமே எதுவுமே கிடையாது. நான் சென்ற வருடம் 2-வீலர் வாங்கும்போது, டீலர் 2% கமிஷன் கட்டவேண்டும் என்பதால் டெபிட் கார்டு வேண்டாம் என்று தவிர்த்தார். என்னை GPay மூலம் இரண்டு முறை 40,000 பணம் கட்டவைத்தார். (வங்கிக்கு நஷ்டம்.) இனி இப்படி வங்கியை ஏமாற்ற முடியாது. குறைந்தது 1.1% வங்கிக்கு கமிஷன் கட்டவேண்டும். ஆனால் டெபிட் கார்டை விட குறைவு. பொது மக்களுக்கு எந்த மாற்றமும் இல்லை.

  • சக்தி -

    ஆரூர் ரங் முட்டு குடுக்க ஒரு அளவு இல்லையா. ஒரு ஏழை குடும்பங்களுக்கு மாதம் 2000 செலவுகள் செய்தால் போதுமா இப்போது இருக்கும் விலை வாசி யில்

  • R S BALA - CHENNAI,இந்தியா

    இதெல்லாம் வழிப்பறி பகல் கொள்ளைக்கு சமம்.. வர வர எல்லாம் ஒன்வேயில் போய்க்கொண்டிருக்கிறது இது நல்லதல்ல.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்