ADVERTISEMENT
சென்னை: கட்சி வளர்ச்சிக்கும், லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளவும், டில்லி மேலிடம் தெரிவிக்கும் வியூகங்கள், அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு கசிவது எப்படி என, தமிழக பா.ஜ.,வில் விசாரணை நடக்கிறது.
வரும், 2024 லோக்சபா தேர்தலில், தமிழகத்தில், 15 தொகுதிகளில் போட்டியிட்டு, 10ல் வெற்றி பெற, பா.ஜ., மேலிடம் திட்டமிட்டுள்ளது.
இதற்காக, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, 'பூத்' கமிட்டி அமைப்பது உள்ளிட்ட தேர்தல் பணிகளை அக்கட்சி துவங்கி விட்டது.
தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தோற்கடிப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்பட்டு, தமிழக பா.ஜ., நிர்வாகிகளிடம் அவ்வப்போது அக்கட்சி மேலிடம் தெரிவிக்கிறது.

இதற்கிடையே, அ.தி.மு.க.,வின் பழனிசாமி ஆதரவாளர்கள், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆதரவாளர்கள் இடையில் தொடர்ந்து கருத்து மோதல் நடக்கிறது.
இருப்பினும், சில பா.ஜ., நிர்வாகிகள், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களுடன் ரகசிய தொடர்பில் உள்ளனர். இதேபோல், அக்கட்சியை சேர்ந்த சிலர், தி.மு.க., அமைச்சர்களுடனும் நட்பு பாராட்டி வருகின்றனர்.
பா.ஜ.,வில், 'சீட்' பெற்று, அ.தி.மு.க., ஆதரவுடன் வெற்றி பெற திட்டமிட்டுள்ளனர். தி.மு.க.,வினருடன் தொடர்பில் உள்ளவர்கள், அரசு ஒப்பந்த பணிகளை எடுத்து வருகின்றனர்.
அண்ணாமலை தற்போது கர்நாடகா தேர்தல் பணியில் ஈடுபட்டிருப்பதால், பா.ஜ., நிர்வாகிகள், தி.மு.க., - அ.தி.மு.க.,வினருடன் அதிக நெருக்கம் காட்டுகின்றனர்.
கட்சி வளர்ச்சிக்கும், தேர்தலை எதிர்கொள்ளவும் டில்லி மேலிடம் தெரிவிக்கும் வியூகங்களை கசிய விடுகின்றனர். இந்த விபரம் மேலிடத்துக்கு சென்றுள்ளது.
அவர்கள் யார் என்பதை மத்திய உளவு துறை வாயிலாக, பா.ஜ., மேலிடம் கண்காணிக்க துவங்கியுள்ளது.
வாசகர் கருத்து (18)
அங்கேயும் இவிங்களுக்கு உளவாளிகள்.இருப்பார்கள். காசை விட்டெறிந்தச்ல் கிடைக்காத தகவல்கள்.இல்லை
பிஜேபினர் ஒன்னும் உத்தம புத்திரர்கள் இல்லை எல்லா கட்சிளும் கருப்பு ஆடுகள் உண்டு பிஜேபி விதி விளக்கு இல்லை
மத்திய அரசுக்கும் தமிழ்நாடு மாநில அரசுக்கும் இடையிலான விஷயங்கள் தமிழக அரசுக்கு தெரிவிப்பதற்கு முன்பே தமிழக மாநில பாஜக தலைவருக்கு எப்படி தெரிகிறதோ அதே போல் தான்!
கட்சிக்கு சேவகம் புரிய தான் உளவுத்துறை ஒன்றியத்தின் பொது நிதியில் இருந்து சம்பளம் பெறுகிறதா?
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
நேர்மையான அரசியல் என்று அண்ணாமலை சொன்னால் இது போல் பிரச்சனைகள் தோன்றும்