கஸ்தூரிநாயக்கன்பாளையத்தில் தோட்ட தொழிலாளி சாவு
வடவள்ளி:கஸ்தூரி நாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில், தோட்ட தொழிலாளி, உயிரிழந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், பழைய கன்னிவாடியை சேர்ந்தவர் முத்துவீரன்,26. இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக, கஸ்தூரிநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தோட்டத்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர், அங்கேயே, ஒரு அறையில் தங்கி வருகிறார். இந்நிலையில், நேற்று காலை, வெகுநேரமாகியும், முத்துவீரன் தனது அறையில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அடுக்குமாடி குடியிருப்பு நிர்வாகத்தினர், இதுகுறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று, அறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, முத்துவீரன் நிர்வாண நிலையில், உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது. போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!