Load Image
Advertisement

தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் டார்கெட்!

Stalin Target!    தி.மு.க.,வினருக்கு ஸ்டாலின் டார்கெட்!
ADVERTISEMENT
''போலீஸ் டிபார்ட்மென்ட்ல, 15 வருஷமா பதவி உயர்வு இல்லாம தவிக்காவ வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அண்ணாச்சி.

''அவங்களுக்கு என்ன பிரச்னைங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''போன, 2008ல தி.மு.க., ஆட்சியில இருந்தப்ப, தமிழக போலீஸ்ல, 745 பேர் எஸ்.ஐ.,யா நியமிக்கப்பட்டாவ... இதுல, 130 பேர் இன்னும் பதவி உயர்வு கிடைக்காம தவிக்காவ...

''இத்தனைக்கும், 150 இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியா தான் கிடக்காம்... ஆனாலும், 'புரமோஷன்' பேச்சையே காணல வே...

''இதுல கொடுமை என்னன்னா, ஆயுதப்படை, சிறப்பு காவல் படையில, 2011ல சேர்ந்த எஸ்.ஐ.,க்களுக்கு சட்டம் - ஒழுங்கை தவிர, இதர பிரிவுகள்ல இன்ஸ்பெக்டரா பதவி உயர்வு போட்டுட்டாவ...

''அவங்களுக்கு முன்னாடி சேர்ந்த எங்களை, 15 வருஷமா காக்க வைக்கிறது நியாயமான்னு பாதிக்கப்பட்ட எஸ்.ஐ.,க்கள் குமுறுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''ஒரே ஒரு வீடியோ, பெண் அதிகாரிக்கு பிரச்னையை குடுத்துடுச்சு பா...'' என்றபடியே, இஞ்சி டீயை அருந்தினார் அன்வர்பாய்.

''அப்படி என்ன வீடியோ ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்த வருவாய்த் துறை பெண் அதிகாரி ஒருத்தர், தன்னோட உயர் அதிகாரிக்கு, மொபைல் போன்ல பேசி மதிய உணவுக்கு, 'ஆர்டர்' செய்ற வீடியோ, சமூக வலைதளத்துல தீயா பரவிடுச்சு பா...

''இது சம்பந்தமா, போலீஸ்ல அந்த பெண் அதிகாரி புகார் குடுத்தாங்க... விசாரணையில, இருப்பிடச் சான்று கேட்டு விண்ணப்பிச்ச ஒருத்தரிடம் உரிய ஆவணங்கள் இல்லாததால, அவரோட விண்ணப்பத்தை பெண் அதிகாரி நிராகரிச்சிருக்காங்க பா...

''கடுப்பான அந்த நபர், பெண் அதிகாரி, மொபைல் போன்ல பேசுறதை படம் பிடிச்சு பரப்பிட்டாரு... அந்த நபரை போலீஸ் எச்சரிச்சு அனுப்பிடுச்சு பா...

''இந்த விஷயத்தை முழுசா விசாரிக்காம அந்தப் பெண் அதிகாரியை, 'டிரான்ஸ்பர்' செஞ்சிட்டாங்க... இதுல என்ன கொடுமைன்னா, எந்த அதிகாரிக்காக அந்தம்மா மதிய உணவு ஆர்டர் செய்தாங்களோ, அதே அதிகாரி தான், 'டிரான்ஸ்பர்' உத்தரவும் போட்டு இருக்காரு பா...'' என முடித்தார், அன்வர்பாய்.

ஒலித்த மொபைல் போனை எடுத்த குப்பண்ணா, ''தனலட்சுமி மேடம்... ஜெய்பீம் சார்ட்ட பேசிட்டு நானே கால் பண்றேன்...'' எனக் கூறி வைத்தவர், ''நம்பர் ஒன் இடத்தை பிடிக்க, 'டார்கெட்' வச்சு உறுப்பினர்களை சேர்க்கறா ஓய்...'' என்றார்.

''எந்தக் கட்சியிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.

''லோக்சபாவுல, மூணாவது பெரிய கட்சியா தி.மு.க., இருந்தாலும், அதை வடமாநில தலைவர்கள் பெரிய கட்சியா அங்கீகரிக்க மாட்டேங்கறா... இதனால, மாநில அளவுல அதிக உறுப்பினர்கள் உடைய கட்சியா, தி.மு.க.,வை உயர்த்த ஸ்டாலின் ஆசைப்படறார் ஓய்...

''இதுக்காக, ஏப்., 3லஆரம்பிச்சு, ஜூன் 3 வரைக்கும், ஒரு கோடி உறுப்பினர்களை தி.மு.க.,வுல புதுசா சேர்க்க சொல்லியிருக்கார்... ஒரு சட்டசபை தொகுதிக்கு, 50 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்க்கணும்னு, 'டார்கெட்' நிர்ணயிச்சிருக்கார் ஓய்...

''மாவட்ட செயலர்களும், பேரூர், ஒன்றிய, நகர, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டி உறுப்பினர் சேர்க்கையை முடுக்கி விட்டிருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.


வாசகர் கருத்து (1)

  • D.Ambujavalli - Bengaluru,இந்தியா

    முனிசிபாலிட்டி நாய் பிடிப்பவர்களைப்போல, கூட்டத்துக்கு ஆள் சேர்ப்பதுபோல லாரிகளில் அடைத்து, பிரியாணி, குவார்ட்டர் சப்ளை செய்து பிடிக்க வேண்டியதுதான் காண்ட்ராக்ட், கமிஷன் என்று 'சம்பாதித்ததெல்லாம் இதிலேயே கரைந்துவிடுமோ என்று இப்போதே நிருவாகிகள் கன்னத்தில் கைவைத்து விட்டார்கள்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement