Load Image
Advertisement

அமெரிக்க அதிபர் பைடனை கிண்டலடித்த சவுதி டிவி

ரியாத்:மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில், எம்.பி.சி., என்ற தனியார், 'டிவி' சேனல் இயங்கி வருகிறது.

இதில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. இதில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரீஸ் ஆகியோரை கேலி செய்யும் வகையில் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் ஞாபக மறதி, சோம்பேறித் தனத்தை சித்தரிக்கும் வகையில் அவரது கதாபாத்திரம் இருந்தது.

விமானத்தில் ஏறும்போது தடுமாறி விழுவது, மேடையில் ரஷ்ய அதிபர் பெயரை மறப்பது, செய்தியாளர் சந்திப்பின் போது திடீரென துாங்குவது போன்ற நிகழ்வுகள் தொகுக்கப்பட்டிருந்தன.

மேலும், துணை அதிபர் கமலா ஹாரீசின் தோற்றத்தில் வரும் பெண் கதாபாத்திரம், அதிபர் ஜோ பைடனின் தவறுகளை சுட்டிக்காட்டுவது போல் அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி, சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


வாசகர் கருத்து (2)

  • Fastrack - Redmond,இந்தியா

    அமெரிக்காவில் இதெல்லாம் குற்றமாகாது .

  • chola perarasu - thiruvarur,இந்தியா

    சரியாதான் சொல்லியிருக்காங்க , அவரு செஞ்சாரு இவங்க சொன்னாங்க

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
YouTube & Telegram
Advertisement
 
Advertisement