டில்லி தீன் தயாள் உபாத்யாயா மார்க் சாலையில் பா.ஜ. மத்திய தலைமை அலுவலகம் உள்ளது. இதன் வளாகத்தில் கூடுதலாக கட்டடங்கள், ஆடிட்டோரியம், ஆகியன கட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தன. பணிகள் நிறைவடைந்த நிலையில், இதன் திறப்பு விழா நடந்தது.

இதில் பங்கேற்க பிரதமர் மோடி வருகை தந்தார். அவரை பா.ஜ. மூத்த தலைவர் நட்டா, அமித்ஷா, கட்கரி ஆகியோர் வரவேற்றனர். பின்னர் குடியிருப்பு கட்டடங்களை மோடி திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் பா.ஜ. மூத்த நிர்வாகிகளுடன் கலந்துரையாடினார்.
இளைஞர்கள் முன்னேற வாய்ப்பு : பிரதமர்
தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது: 2 மக்களவை தொகுதி எம்.பிக்களுடன் துவங்கிய பயணம் தற்போது 303 இடங்களை எட்டி உள்ளது. வடக்கில் இருந்து தெற்கு வரையிலும் பா.ஜ., இளைஞர்கள் முன்னேற பா.ஜ., வாய்ப்பு அளிக்கிறது.
1984 ல் நடந்த சம்பவம் ஒரு நாளும் மறக்க முடியாதது. அந்த உணர்வுபூர்வமான சூழலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. நாங்கள் முற்றிலுமாக அழிந்தோம். அதற்காக நாங்கள் மன உளைச்சலுக்கு ஆளாக வில்லை .அடுத்தவர்களை குறை சொல்ல வில்லை . விரைவில் தேர்தல் வர இருப்பதால் பாஜவினர் மற்றும் கட்சி எம்.பிக்கள் அனைவரும் மக்களுடன் தொடர்பில் இருக்க வேண்டும். தென் மாநிலங்களில் பா.ஜ., வளர்ச்சியடையச் செய்ய வேண்டும். மக்களிடையே உ்ண்மையான கட்சியாக பா.ஜ. விளங்கி வருகிறது.சிலர் வெளிநாட்டில் இருந்து இந்தியாவை அவமானப்படுத்துகின்றனர். இது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகும். பா.ஜ.,வின் தமரை அனைத்து இடங்களிலும் மலர்ந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (4)
எங்கப்பா மத்த உபிஸ் யாரையும் காணோம்...1000 ரூபா வாங்க போயிட்டாங்களா??
தமிழ் நாட்டில் தாமரை மலர் இன்னும் பத்து ஆண்டுகள் போதும்.. அண்ணாமலை போன்ற செயல்படும் தலைவர்கள் இருக்க வேண்டும்.
எங்கு தாமரை வளர்ந்தது உள்ளது ஊழல் வில் யா