அரசு பங்காளாவை காலி செய்ய சம்மதித்தார் ராகுல்
புதுடில்லி: எம்.பி.என்ற முறையில் வழங்கப்பட்ட அரசு பங்களாவை விதிக்குட்பட்டு காலி செய்வதாக, ராகுல் அறிவித்துள்ளார்.

ராகுல் எம்.பி பதவி தகுதி நீக்கத்தை தொடர்ந்து, டில்லி துக்ளக் சாலையில் உள்ள அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என லோக்சபா செயலாளர் நோட்டீஸ் அனுப்பினார். மேலும், நோட்டீசில் ‛ஒரு மாதத்திற்குள் காலி செய்ய வேண்டும்' எனவும் கூறினார்.
மகிழ்ச்சியான தருணம்
இது குறித்து ராகுல் லோக்சபா செயலாளருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: 20 ஆண்டுகளாக அரசு பங்களாவில் இருந்த என்னுடைய மகிழ்ச்சியான தருணங்களை மறக்க முடியாது. எந்த பாரபட்சமும் இல்லாமல் உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்களுக்கு கட்டுப்படுவேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கண்டனம் தெரிவித்த கார்கே:
இது குறித்து காங்., தலைவர் கார்கே நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ராகுலை பலவீனப்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் செய்து வருகின்றனர். அவரை பயமுறுத்தும், அரசின் அணுகுமுறையை கண்டிக்கிறேன் அவர் பங்களாவை காலி செய்தால், அவரது தாயுடனோ அல்லது என்னுடவோ இருப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (18)
அப்படியே இந்தியாவை விட்டு காலி செய்ய பாரு பப்பு காந்தி
1). வேற வழி. இல்லையெனில் கோர்ட் மற்றும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அவமதித்து போல் ஆகிவிடும்.2). பொறகு தண்டனை குறைப்பு மேல்முறையீடு அப்பீல் பண்ண முடியாது.
டில்லி துக்ளக் சாலையில் உள்ள அரசு பங்களாவை காலி செய்ய வேண்டும் என்ன செய்வது. துக்ளக் போலவே நடந்துகொவதால் துக்ளக் ராகுல் என்றே பெயர் வைக்கலாம்
எம்பிக்களுக்கு ஏன் அரசு பங்களா என்று தெரியவில்லை. பாராளுமன்றம் ஆண்டுக்கு இரண்டு மூன்று முறைதான் கூடுகிறது. அமெரிக்காவில் செய்வது போல எம்பிக்களுக்கு என்று ஒரு தனி அலுவலகம் அமைத்து கொடுங்கள். அவ்வளவே போதும், இந்த எம்பிக்கள் கிழிக்கும் கிழிப்புக்கு. பாராளுமன்ற கூட்டங்களுக்கு அதிகம் வருவதில்லை. வந்தாலும் அமளி செய்து வரிப்பணத்தை வீணாக்குகிறார்கள். மக்கள் நஅணில் ஒருவருக்கும் அக்கறை இருப்பதாக தெரியவில்லை.
//அரசு பங்களாவை காலி செய்ய சம்மதித்தார் ராகுல் // ...அப்படியானால் முன்பு நேஷனல் ஹெரால்டு போல அரசு பங்களாவையும் ஆட்டைய போடலாம் என்று நினைத்து கொண்டு இருந்தாரா ???