பாதுகாவலர்களை தாக்கிவிட்டு அரசு கூர்நோக்கு இல்ல சிறுவர்கள் ஓட்டம்
வேலுார், அரசினர் கூர்நோக்கு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து, ஆறு சிறுவர்கள் தப்பி ஓடியது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலுார், காகிதப்பட்டறை பகுதியில், அரசு கூர்நோக்கு பாதுகாப்பு இல்லம் உள்ளது. இங்கு பல்வேறு குற்றங்கள் செய்த சிறுவர்கள், 42 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த, 25ம் தேதி மாலை, இல்லத்தில் உள்ள ஒரு சிறுவன், தன்னை வேறு இல்லத்துக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, சுவரிறின் மீதேறி நான்கு மணி நேரம் போராட்டம் நடத்தினார்.
இந்நிலையில் நேற்றிரவு, 8:00 மணிக்கு இல்லத்திலிருந்த ஆறு சிறுவர்கள், மூன்று பாதுகாவலர்களை தாக்கி விட்டு, வெளிப்புற கதவை திறந்து கொண்டு தப்பியோடினர். படுகாயமடைந்த மூன்று பேரையும் மீட்ட போலீசார், வேலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வேலுார் வடக்கு போலீசார், நான்கு தனிப்படை அமைத்து ஆறு சிறுவர்களை தேடி வருகின்றனர். வேலுார் டி.ஐ.ஜி., முத்துசாமி, எஸ்.பி., ராஜேஷ் கண்ணன் இல்லத்தில் விசாரணை நடத்தினர்.

பேச்சுவார்த்தைக்கு பிறகு சிறுவன் இறங்கினான். உள்ளே சென்ற சிறுவன் அன்றிரவு, 10 சிறுவர்களுடன் சேர்ந்து, இல்ல பாதுகாவலர்களை தாக்கி வெளியே துரத்தினான். இல்லத்தை உள் பக்கமாக பூட்டிக்கொண்டு, எட்டு லட்சம் ரூபாய் மதிப்புள்ள 'டிவி', பெஞ்ச், நாற்காலி, டியூப் லைட், சமையல் பொருட்களை அடித்து நொறுக்கி சூறையாடி, ரகளையில் செய்து தப்பியோட முயன்றார். வேலுார் வடக்கு போலீசார் சென்று தடுத்தனர்.
இந்நிலையில் நேற்றிரவு, 8:00 மணிக்கு இல்லத்திலிருந்த ஆறு சிறுவர்கள், மூன்று பாதுகாவலர்களை தாக்கி விட்டு, வெளிப்புற கதவை திறந்து கொண்டு தப்பியோடினர். படுகாயமடைந்த மூன்று பேரையும் மீட்ட போலீசார், வேலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். வேலுார் வடக்கு போலீசார், நான்கு தனிப்படை அமைத்து ஆறு சிறுவர்களை தேடி வருகின்றனர். வேலுார் டி.ஐ.ஜி., முத்துசாமி, எஸ்.பி., ராஜேஷ் கண்ணன் இல்லத்தில் விசாரணை நடத்தினர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!