பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு: அதிமுக அலுவலகத்தில் கொண்டாட்டம்
சென்னை: தீர்ப்பு தங்களுக்கு சாதமாக வந்துள்ள நிலையில், பழனிசாமி ஆதரவாளர்கள் செண்டை மேளம் முழங்க, அதிமுக அலுவலகத்தில் கொண்டினர்.

அ.தி.மு.க. பொதுச் செயலர் தேர்தல் மற்றும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை கோரிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (மார்ச் 28) பரபரப்பு தீர்ப்பளித்தது. ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. மேலும் பொதுசெயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கவும் கோர்ட் மறுத்து விட்டது. பொதுக்குழுவுக்கு எதிராக பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது.

கொண்டாட்டம்:
பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளதால், அதிமுக அலுவலகத்தில், செண்டை மேளம் முழங்க அதிமுக தொண்டர்கள், பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். பழனிசாமி இல்லம் முன்பு தொண்டர்கள் கேக் வெட்டி கொண்டாடினர்.
வாசகர் கருத்து (4)
பன்னீர்செல்வம் அவர்களே பாஜகவில் சேர்வது நலம்.
தி மு க வுடன் இணைந்து விடுங்கள் கமலி போல உங்களுக்கு எம் பி சீட்டு கிடைக்கும், தனியாக போட்டி இட்டால் நஷ்டம்தான்.
வெற்றிக்கு வாழ்த்துக்கள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
EPS அவர்கள் முதலமைச்சர் பதவில இருந்தத விட இந்த வெற்றில மகிழ்ச்சி அதிகமா இருக்கு சரி மக்கள் உங்களக்கு வாய்ப்பு குடுபாங்களானு பார்ப்போம்