ஜூலை 11ல் நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது. மேலும் பொதுசெயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கவும் கோர்ட் மறுத்து விட்டது.
அ.தி.மு.க. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை கோரியும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தரப்பு எம்.எல்.ஏ.,க்கள் மனோஜ் பாண்டியன் வைத்திலிங்கம் மற்றும் ஜெ.சி.டி.பிரபாகரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.

மார்ச் 22ம் தேதி இம்மனுக்களின் விசாரணை நீதிபதி குமரேஷ் பாபு முன் நடந்தது. இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இவ்வழக்கில் இன்று ( மார்ச் 28 ) காலை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
வழக்கு தீர்ப்பு வெளியானதும், பழனிசாமி அதிமுக அலுவலகம் வந்தார். அங்கு அவரை கட்சியின் பொதுச்செயலாளராக கட்சி தேர்தல் அலுவலர்கள் அறிவித்தனர். தொண்டர்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.
வாசகர் கருத்து (73)
மணிவண்ணன் ஒரு தீர்க்கதரிசி. சத்யராஜ்...அட அட.. அவரும் கொங்கு நாட்டு சிங்கங்கோய் நவீன நாக ராஜ சோழன் பராக் பராக் பராக். மூணாவது பராக் சொல்லி முடிக்கும் முன்பே.. இன்னொரு அதி நவீன நாகராஜா சோழன் அந்த கட்சியிலே முளைப்பார் என்பதை ஆழுத்தமாகவும்.. ஆணித்தரமாகவும் அடித்து சொல்கிறேன்
சம்பந்திக்கு டெண்டர் கொடுத்த வழக்கு , மணிங்க மேல ஊழல் வழக்கு எல்லாம் வருஷ கணக்குல இழுத்துக்கிட்டு போகுது ...ஆனா இந்த மாதிரி கேஸுக்கு மட்டும் தீர்ப்பு உடனே வருதே, நாடு நல்லா விளங்கிடும்....
ராணுவ கட்டுப்பாடே கொண்டு வரதுக்குள்ள இந்த நவீன நாகராஜா சோழன் எம் ஏ வுக்கு நாக்கு தள்ளிடாதா? பணம் சதாசிவத்துக்கு ஓகே... ஆனா சண்முகத்துக்கு ஓகேவா?
ஓஒ .. நாக ராஜா சோழன் எம் ஏ இவர் தானோ?? அப்போ மணிவண்ணன் யாருங்கோ?? தங்கமணியா இல்லை வேலுமணியா? இல்லை சசிகலாவா??? இப்போ புது நாகராஜா சோழன் ஆகும் எண்ணம் மீதி இருக்கிற தங்கமணிக்கு... வேலுமணிக்கு....செல்லூர் ராஜுவுக்கு ...காமராஜூவுக்கு ....முனுசாமிக்கு.... அந்த தண்ணி வண்டி வன்னியர்... ( தனியா பெயரை வேற சொல்லுணுமா??) அதுதாங்க நம்ம சண்முகம்....இவர்களுக்கு வராதா??
இப்போ கட்சியாய் கைப்பற்ற ஒரு புத்தம்புதிய செய்முறை விளக்கத்தை நவீன நாகராஜா சோழன் எம் ஏ ( ஹி ஹி ) சொல்லி கொடுத்திருக்கிறார். நமக்கு முற்பகல் செய்யின் பிற்பகல் தானே விளையும் என்ற அந்த பழமொழி மிக மிக ஆணித்தரமாக நடைமுறையில் நடந்துகொண்டிருப்பது தெரியும் அடுத்த நவீன நாகராஜா சோழன் வேலு பாயி யா இல்லை தங்கமணியா? இல்லை தண்ணிவண்டி ஷண்முகமா? யாரிடம் அதிகமாக குவிந்து இருக்கு?? இந்த உறுபடிகளில் யாரை மேலே இருப்பவன் தயார் செய்வான்???