சென்னை: பயணியர் தேவை அதிகமாக உள்ள தென் மாவட்ட வழித்தடத்தில், 'வந்தே பாரத்' ரயில் சேவை துவங்க வேண்டும் என, பயணியர் சங்கம் கோரிக்கை விடுத்துஉள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணியர் சங்க தலைவர் ஸ்ரீராம், செயலர் எட்வர்ட் ஜெனி ஆகியோர் கூறியதாவது: சென்னை - கோவைக்கு 'வந்தே பாரத்' ரயில் சேவை வரவேற்கத்தக்கது. இருப்பினும், பயணியர் தேவை அதிகமாக உள்ள தென் மாவட்ட தடத்தில், வந்தே பாரத் இயக்காதது ஏன் என தெரியவில்லை.

சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள 740 கி.மீ., வழித்தடத்தில், சென்னை -- திருநெல்வேலி இடையே முழுதும் மின்மயமாக்கல் உடன் கூடிய, இரட்டை அகல ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள பணிகளை விரைவில் முடிக்க உள்ளனர். எனவே, இந்த தடத்தில் வந்தே பாரத் ரயில் இயக்க போதிய வசதி வாய்ப்புகள் உள்ளன.
மற்ற முக்கிய வழித்தடத்தில் இருப்பதுபோல், தென் மாவட்டங்களுக்கு பகல் நேர அதிவிரைவு ரயில்களின் சேவை மிகவும் குறைவாகவே இருக்கின்றன. பயணியரின் அத்தியாவசிய தேவையாக கருத்தில் கொண்டு, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு வந்தே பாரத் ரயில் சேவையை துவங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து (14)
வந்தே பாரத் சதாப்தி, தேஜாஸ் ரயில்களை மலையாளிகள் கேப்பதே கிடையாது.. காசர்கோடு முதல் - திருவனந்தபுரம் வரை செல்ல 12 மணி நேரம் ஆனாலும், அவர்களுக்கு தேவை முக்கிய ரயில்நிலையங்களில் நின்று செல்லும் இன்டெர் சிட்டி விரைவு வண்டிகள் மட்டுமே. பெரும்பாலான மக்களுக்கு பயன்படும் ... இரண்டாம் வகுப்பு இருக்காய் வசதி, பொது பெட்டிகள், மற்றும் ஏசி சேர் கார்கள் சில. மட்டுமே போதுமானவை ....சென்னை காரன் மட்டும் பயணம் செய்ய வேண்டும் என்றால் இடைவழி நகரங்கள், கார்பொரேஷன், மாவட்ட தலைநகர மக்கள், என்ன கட்டை வண்டியில் பயணம் செய்வார்களா? இல்லை கால் நடையாகவா? இன்டெர் சிட்டி வண்டிகள் மட்டுமே இன்றைய தேவை ....கொழுத்துப்போன பணக்கார பயணிகளுக்கான வண்டிகள் அல்ல ....
மெட்ரோ துவங்கினால் அந்த ஊர் எம்பியே யூனியன் துவக்கி வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தூண்ட வாய்ப்புள்ளது. கம்யூனிஸ்டுக்கு😛 வாக்களிக்கும் ஊர்களுக்கு புதிய திட்டங்களை செயல்படுத்துவது வீண்.
நமக்கு எட்டு வழி சாலை வேண்டாம் எரிவாயு குழாய் பதிக்க வேண்டாம் மீத்தேன் வேண்டாம் கூடங்குளம் அணுமின் நிலையம் வேண்டாம் தாமிர தொழிற்சாலை வேண்டாம் குளச்சல் துறைமுகம் வேண்டாம் நியூட்ரினோ ஆய்வு மையம் வேண்டாம். தொழில் வளர்ச்சி ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பதாகும். வளர்ச்சி எங்கிருந்து வரும்? கோ பேக் மோதி என்று கோஷமிட்டு விட்டு வந்தே பாரத் ரயில் மட்டும் மோதியிடம் கேளுங்கள்.
சென்னை டு கன்னியாகுமரி எதன்னை ரயில் விட்டாலும் பத்தாது வந்தே பரத் விட்டால் ஆம்னி பஸ் படுத்து விடும் அதனால் சந்தேகம் தான் .
Vaigai pondru nellaiyil irunthu parani express vendum.