'தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியின் தலைவர் வாசன்' என சமூக வலைதளங்களில் எதிர்கோஷ்டியினர் கிண்டலாக பதிவு செய்துள்ளனர்.
சமீபத்தில் மதுரையில் த.மா.கா. நிர்வாகிகள் சிலர் அழகிரி முன்னிலையில் காங்கிரசில் இணைந்தனர். அப்போது 'வாசன் இணைந்தால் அவரது தலைமையில் பணியாற்ற தயார்' என அழகிரி பேசினார். அவரது பேச்சு கட்சியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
'காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கு எதிரியாக செயல்படுகிற வாசனுக்கு எப்படி அழைப்பு தரலாம்' என்றும் 'வாசன் பண்ணை வீட்டில் வேண்டுமானால் அழகிரி வேலை செய்யட்டும்' என்றும் கிண்டலடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

இந்நிலையில் ராகுல் எம்.பி. தகுதி நீக்க விவகாரம் தொடர்பாக சமீபத்தில் த.மா.கா. தலைவர் வாசன் தன் 'டுவிட்டர்' பக்கத்தில் 'சட்டம் தன் கடமையை செய்திருப்பதாக கருதுகிறேன்' என பதிவிட்டிருந்தார்.
இதையடுத்து அழகிரி எதிர்ப்பு கோஷ்டியினர் 'ராகுல் தகுதி நீக்கம் செய்தது சரிதான் என அழகிரியின் தலைவர் வாசன் திட்டவட்டம்' என கிண்டலாக பதிவு செய்துள்ளனர்.
- நமது நிருபர் -
வாசகர் கருத்து (5)
தமாகா ஒரு தமாஷா கட்சி.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு அழகிரி அவர்கள் ஐயா மூப்பனார் அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர். அவர்களால் நாடாளுமன்ற உறுப்பினராக வாய்ப்பு பெற்றவர். தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் காங்கிரஸ் சித்தாந்தத்திற்கு எதிராக செல்வதை தடுக்கவும் ஐயா மூப்பனார் மீது கொண்ட விசுவாசத்தை காட்டுவதற்காகவும் அவர் இதைச் சொல்லி இருக்கலாம்.. மற்றபடி இதில் தலைவர் அழகிரி அவர்களை குறை சொல்ல ஏதுமில்லை
சட்டம் புரியாத ராகுல் காந்தி? ?க்கு பலம் சேர்க்க திரு வாசன் போன்றவகளுக்கு தூண்டில் போடுகிறாரா அழகிரி. தந்தையின் நேர்மையை திரு வாசனிடம் பார்க்கிறோம்
திரு வாசன் நேர்மையாகப் பேசக்கூடியவர் . அவர் தந்தை திரு கருப்பையா மூப்பனார் நேர்மையான அரசியல்வாதி என்று பெயர் எடுத்தவர் . அவர் பிரதமராக வாய்ப்பு வந்ததை தடுத்தவர்கள் யார் என்பது இன்றைய தமிழ்நாடு திமுக காங்கிரஸ்க்கு நன்றாகத் தெரியும் இன்றைய இவர்கள் பேச்சும் ராகுல் உளறலுக்கு சற்றும் குறைவில்லை
உங்களுக்கு வேறு வழியில்லை. பிதற்றுவதற்கெல்லாம் தலையாட்ட வேண்டும்.