ADVERTISEMENT
மனித நாகரிக வளர்ச்சியில் தற்போது மக்காத குப்பைகளின் ஆதிக்கம் அதிகரித்து பூமியை பாழ்படுத்தும் விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இவ்வாறு மனித குலத்தால் தெருவிலும், குப்பை தொட்டிகளிலும் வீசப்படும் பொருட்களை முறைப்படி மறுசுழற்சிக்கும், மக்க வைக்க நடவடிக்கை எடுக்காமல் பல இடங்களில் தீயிட்டு கொளுத்தப்படும் அவலமும் நடக்கிறது.
இதனால் பல்வேறு நோய்கள் மனிதருக்கும், பிற உயிரினங்களுக்கும் ஏற்படுகிறது.
சில பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் பணியாளர்களை அமர்த்தி மக்கும் பொருட்களை துண்டு, துண்டாக வெட்டி அதற்குரிய தொட்டியில் சானம், நுண்ணுயிர் கரைசல் கலந்து பல நாட்கள் வைத்து பின்னர் ஜல்லடையில் சலித்து மண் புழு உரமாக மாற்றுகின்றனர் என்பது ஆறுதலாக உள்ளது.
இது ஒருபுறமிருக்க இன்றும் திறந்தவெளிகளை கழிப்பிடமாக பயன்படுத்தும் முறை பரவலாக இருக்கவே செய்கிறது. இதை ஒழிக்க அரசு சார்பில் வீடுகளில் தனிநபர், பொது இடங்களில் ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் அமைக்க அரசு அதிகம் கவனம் செலுத்தி வருகிறது.
இதன் பலனாக இன்றளவில் பெரும்பாலான வீடுகளில் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சில ஆண்டுகளில் கழிப்பறை கழிவுகள் நிரம்புவதால் தனியார் வாகனங்களை அழைத்து அகற்றுகின்றனர். செப்டிங் டேங்க் வாகன ஓட்டிகள் இதை ஆங்காங்கே ரோட்டோரம், நீர்நிலை பகுதிகளில் கொட்டி செல்கின்றனர்.
இதனால் அப்பகுதியினர் சுகாதார சீர்கேடுடன் அவதி அடைகின்றனர். இதை முறைப்படுத்தி அரசு சார்பில் சேகரிப்பு நிலையங்களை ஏற்படுத்தி, கழிவுகளைப் உரமாக்க வேண்டும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!