Load Image
Advertisement

ஏப்.,1 முதல் ரேஷனில் செறிவுட்டப்பட்ட அரிசி வினியோகம் : ரத்த சோகையை தடுத்து, கருவளர்ச்சிக்கு உதவும்

Distribution of Concentrated Rice in Ration from April 1 : Prevents Anemia and Helps in Fertility   ஏப்.,1 முதல் ரேஷனில்  செறிவுட்டப்பட்ட அரிசி  வினியோகம் : ரத்த சோகையை தடுத்து, கருவளர்ச்சிக்கு உதவும்
ADVERTISEMENT
தேனி,மார்ச் 28- தேனி மாவட்டத்தில் ஏப்ரல் 1 முதல் ரேஷன்கடைகளில் செறிவூட்டப்பட்ட அரிசி கலந்த அரிசி வினியோகிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். செறிவூட்டப்பட்ட அரிசிகள் பற்றி மக்களிடம் நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள், வழங்கல் பிரிவு அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு வழங்க வந்தவர்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசியில் சர்க்கரைப்பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம் தயார்செய்து நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் வழங்கினர்.

தேனி நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் செந்தில்குமார் கூறுகையில், செறிவூட்டப்பட்ட அரிசி என்பது போலிக் அமிலம், வைட்டமின் பி12, இரும்புச்சத்து அரிசி மாவுடன் கலக்கப்படுகிறது. கலக்கப்பட்ட மாவுகள் மீண்டும் அரிசி குறுணைகளாக உருவாக்கபடுகிறது. அவ்வாறு சத்துக்களுடன் உருவாக்கப்பட்ட அரிசிகள் சாதாரண அரிசியை விட வெள்ளை நிறமாக இருக்கும். இந்த அரிசிகள் நெல் அரவை ஆலைகளில் அரிசிகளுடன் கலக்கப்படும். அதாவது 100 டன் சாதாரண அரிசியுடன் ஒருடன் செறிவூட்டப்பட்ட அரிசி கலக்கப்பட்டு ரேஷன் கடைகளுக்கு வழங்கப்படும்.

மாநிலத்தில் விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் முழுவதும் சோதனை அடிப்படையில் செறிவூட்டப்பட்ட அரிசிகள் வழங்கப்பட்டு வந்தது. தற்போது தேனி மாவட்டத்தில் அங்கன்வாடி மையங்கள், பள்ளி மதிய உணவுத்திட்டம், காலை உணத்திட்டங்கள், அரசு விடுதிகளில் வழங்கப்பட்டு வந்தது. தற்போது ரேஷன் கடைகளுக்கும் விரிவுபடுத்தப்படுகிறது.

இந்த அரிசிகள் நீரில்கொட்டினால் மிதக்கும் தன்மை உடையது. இதனால் இது மற்ற பொருட்களினால் செய்யப்பட்ட அரிசியோ என்ற பயம் மக்களிடம் எழும் வாய்ப்புள்ளது. மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே செறிவூட்டப்பட்ட அரிசியில் உணவு சமைத்து வழங்கப்பட்டது.

மேலும் இந்த அரிசியை உண்ணுவதால் ரத்தசோகை ஏற்படுவதை தடுக்கிறது, கருவளர்ச்சிக்கும், ரத்த உற்பத்தி, நரம்பு மண்டலத்தின் இயல்பான செயல்பாட்டை சீராக வைப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


வாசகர் கருத்து (1)

  • Jai -

    என்னதான் சத்து கொடுத்தாலும் டாஸ்மாக் சரக்கு ஏறுச்சுன்னா எல்லா சத்தும் வீணாக போயிரும், ஒன்னும் பிரயோஜனம் இல்லை

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement