ADVERTISEMENT
மதுரை -மதுரை தி.மு.க.,வில் நிலவும் 'ஈகோ' யுத்தம், 10 ஆண்டுகளாக கட்சியால் 'பலன்' கிடைக்காத விரக்தி போன்ற காரணங்களால் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கு ஆட்கள் சேர்ப்பதில் திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது.
சட்டசபை தொகுதிகள் வாரியாக புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், பூத் கமிட்டிகள் அமைக்க கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது. இதன்படி தொகுதிக்கு 50 ஆயிரம் புதிய உறுப்பினர் சேர்க்க நிர்வாகிகள் களம் இறங்கியுள்ளனர்.
மதுரையில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளில் தலா 100 வாக்காளர்களுக்கு ஒரு மேற்பார்வையாளர், 10 உறுப்பினர்கள் பூத் கமிட்டி அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. நகரில் அமைச்சர்கள் - மாவட்ட செயலாளர்கள், கவுன்சிலர்கள் - வட்ட செயலாளர்கள், மாவட்டப் பகுதியில் ஒன்றியம்- வார்டு செயலாளர்களுக்கு இடையே 'ஈகோ' யுத்தம் உச்சகட்டத்தில் இருப்பதால் பூத் கமிட்டிகளில் உறுப்பினர்களை சேர்க்க நிர்வாகிகள் திணறுகின்றனர்.
தி.மு.க.,வினர் கூறியதாவது: நகரில் நான்கு தொகுதிகள் மாநகராட்சிக்கு உட்பட்டவை. இதில் வட்ட செயலாளர் சொல்வதை கவுன்சிலர் கேட்பதில்லை; கவுன்சிலர் பரிந்துரைகளை வட்ட செயலாளர் ஏற்பதில்லை. பல தி.மு.க., கவுன்சிலர்களுக்கு தொகுதி நிதி ஒதுக்கவில்லை. இதனால் அதிருப்தியில் உள்ளனர். இந்த அதிருப்தி இருநாட்களுக்கு முன் நடந்த நகர் தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டத்தில் எதிரொலித்தது. அக்கூட்டத்தில் செயலாளர் தளபதி, அமைச்சர் தியாகராஜன் முன்னிலையில் 'எங்களை எந்த அதிகாரியும் மதிப்பதில்லை; ஒரு பாதாளச் சாக்கடை மூடியை கூட எங்களால் மூட வைக்க முடியவில்லை' என கவுன்சிலர்கள் வெளிப்படையாக கொந்தளித்தனர்.
இதேநிலை தான் புறநகர் தொகுதிகளிலும் உள்ளது. இதுதவிர 10 ஆண்டுகளுக்கு பின் ஆட்சிக்கு வந்தும் உண்மையாக உழைக்கும் கட்சிக்காரனுக்கு ஒரு பதவி இல்லை, டெண்டர்கள், 'டாஸ்மாக் பார்', ரேஷன் கடைகள் வருவாய் என எதுவும் கிடைக்கவில்லை என்ற விரக்தியில் உள்ளோம். இதனால் தான் பூத் கமிட்டி உறுப்பினராக சேர்க்கும் ஆர்வம் குறைகிறது என்றனர்.
வாசகர் கருத்து (2)
ஊருக்கு உண்மையாக உழைப்பவர் இனி யாரும் இல்லை. அரசியலில் ஜொள்ளு பேர்வழிகள் வந்து விட்டனர்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
ஜனநாயகத்தின் தூய்மையை பராமரிப்பது தேர்தல் ஆணையத்தின் தலையாய கடமை.