Load Image
Advertisement

வெளிநாட்டு பண விவகாரம்: திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.3.29 கோடி அபராதம்

Foreign money issue: Tirupati Devasthanam fined Rs 3.29 crore   வெளிநாட்டு பண விவகாரம்: திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.3.29 கோடி அபராதம்
ADVERTISEMENT
திருமலை: திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய வெளிநாட்டு பணத்தை வங்கிகளில் டிபாசிட் செய்ய, தேவஸ்தானத்துக்கு ரிசர்வ் வங்கி அனுமதி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


திருமலை திருப்பதியில் உள்ள வெங்கடாஜலபதியை தரிசனம் செய்த பின், பக்தர்கள் தங்கள் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர். தேவஸ்தானம், இந்த காணிக்கைகளை சில்லரை, ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு பணம் என பிரித்து கணக்கிட்டு வங்கிகளில் வரவு வைக்கிறது. வெளிநாடுகளில் காணிக்கையாக வந்த பணத்தை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தால் , உரிய வங்கி கணக்கில் டிபாசிட் செய்யப்பட்டு வந்தது.

Latest Tamil News
இந்நிலையில் திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கையாக வந்த ரூ.30 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணம் செலுத்திய பக்தர்களின் விவரத்தை தேவஸ்தானத்தால் கண்டுபிடிக்க முடியாததால் டெபாசிட் செய்ய ரிசர்வ் வங்கி அனுமதி மறுத்துள்ளது.


மேலும் வெளிநாட்டு பணத்தை டெபாசிட் செய்த பக்தர்களின் விவரங்களை வழங்காத காரணத்தினால் ரிசர்வ் வங்கி திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.3.29 கோடி அபராதம் விதித்துள்ளது.


வாசகர் கருத்து (16)

  • jayvee - chennai,இந்தியா

    NGO என்ற பெயரில் கள்ளப்பணம் மற்றும் போதை மருந்து கடத்தி வரும் அந்த கும்பலை தண்டிக்க வக்கில்லை..

  • தமிழ் -

    திருப்பதி பாலாஜி ரொம்ப பவர்புல்லானவர்.எதற்கும் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் பாத்திரமாக ஹெல்மெட் அணிந்துகொள்ளவும்.கட்டிடத்தின்மேல் எரிகல் ஏதாவது விழுந்துவிடப்போகிறது.

  • Nellai tamilan - Tirunelveli,இந்தியா

    உண்டியலில் போடும் பணத்திற்கு விலாசம் கேட்கும் அதிபுத்திசாலிகள் கொஞ்சமாவது அறிவை பயன்படுத்த வேண்டும். கோவில் பெயரில் தானே வங்கியில் டிபாசிட் செய்கிறார்கள் இதில் சட்டமீறல் எப்பிடி வரும். அடுத்த முறை ரிசர்வ் வாங்கி அதிகாரிகள் வரும் பொழுது கோவிலுக்கு உள்ளே அனுமதிக்காதீர்கள்.

  • S.Bala - tamilnadu,இந்தியா

    இது அணைத்து மதத்திற்கும் பொருந்துமா ?

  • katharika viyabari - coimbatore,இந்தியா

    Stupidity by RBI.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement