ADVERTISEMENT
நியுயார்க்,அம்ரித்பால் சிங்கை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து, அமெரிக்காவின் நியுயார்க்கில் உள்ள 'டைம்ஸ்' சதுக்கத்தில், காலிஸ்தான் ஆதரவாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'வாரியர்ஸ் பஞ்சாப் தே' அமைப்பின் தலைவரும், தீவிரவாத போதகருமான அம்ரித்பால் சிங், பஞ்சாபில் உள்ள போலீஸ் ஸ்டேஷனை சூறையாடிய வழக்கில் தேடப்பட்டு வருகிறார்.
இந்நிலையில், இவரை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து காலிஸ்தான் ஆதரவாளர்கள், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

'ரிச்மண்ட் ஹில்' பகுதியில் இருந்து கார் உள்ளிட்ட வாகனங்களில் பேரணியாக சென்ற அவர்கள், நகரின் முக்கிய பகுதியான டைம்ஸ் சதுக்கத்தில் பேரணியை நிறைவு செய்தனர்.
அப்போது, அங்குள்ள பிரமாண்ட விளம்பர பலகைகளில் அம்ரித்பாலின் படங்கள் ஒளிபரப்பப்பட்டன. பேரணியில் பங்கேற்றவர்கள் அம்ரித்பாலுக்கு ஆதரவாகவும், இந்திய அரசுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பினர்.
வாசகர் கருத்து (3)
இப்போது புரிகிறதா ஆம் ஆத்மி யின் லட்சணம்.
இந்தியாவின் ஸ்திர தன்மையை குலைக்க என்ன வெல்லாம் அந்நியர்கள் மூலம் கூட செய்கிறார்கள்.
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
கள்ள தனமாக அமெரிக்க சென்ற அணைத்து நபர்களும் இந்த கூட்டத்தில் இருப்பார்கள் .. பாதிக்கும் மேல் மாட்டிக்கொள்ளும்