Load Image
Advertisement

சி.பி.ஐ., விசாரணையை எதிர்த்த முன்னாள் அதிகாரி மனு டிஸ்மிஸ்

Former CBI officers plea against investigation dismissed   சி.பி.ஐ., விசாரணையை எதிர்த்த முன்னாள் அதிகாரி மனு டிஸ்மிஸ்
ADVERTISEMENT

புதுடில்லி, சிலை கடத்தல்காரர்களுடன் உள்ள தொடர்பு குறித்து சி.பி.ஐ., விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழக முன்னாள் போலீஸ் அதிகாரி பொன் மாணிக்கவேல் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தமிழக போலீசில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் ஐ.ஜி.,யாக இருந்தவர் மூத்த போலீஸ் அதிகாரி, ஏ.ஜி. பொன் மாணிக்கவேல். சிலைக் கடத்தல்காரர்களுடன் இவருக்கு தொடர்பு இருப்பதாக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய ஐ.காதர் பாட்சா புகார் கூறினார்.

Latest Tamil News
சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பணியாற்றியபோது, பழிவாங்கும் நோக்கில் தன் மீது பொய் குற்றச்சாட்டுகளை கூறியதாக, பொன் மாணிக்கவேலுக்கு எதிராக இவர் குற்றஞ்சாட்டினார்.

சர்வதேச சிலை கடத்தல்காரர் தீனதயாளுடன் நெருக்கமாக இருந்த பொன் மாணிக்கவேல், அவரது உதவியுடன் சில சிலைகளை கடத்தியுள்ளதாகவும் புகார் கூறினார்.

இது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடத்தல்காரர்களுக்கும், பொன் மாணிக்கவேலுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து விசாரிக்கும்படி, சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து பொன் மாணிக்கவேல் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் கிருஷ்ண முராரி, சஞ்சய் கரோல் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை தள்ளுபடி செய்து அமர்வு உத்தரவிட்டுள்ளது.


வாசகர் கருத்து (3)

  • jayvee - chennai,இந்தியா

    CBI விசாரணையை எதிர்க்க காரணம் என்ன ? மடியில் கணம் இல்லை என்றால் வழியில் பயம் எதற்கு ? அவர் ஒன்றும் பொது ஜனம் அல்லது அரசியல் தலைவர் இல்லையே .. CBI யை பார்த்து பயப்படுவதற்கு

  • Bhaskaran - Chennai,இந்தியா

    ஆத்திகராக இருந்தால் இம்மாதிரி கஷ்டம் அனுபவிக்கவேண்டும் சுகிசவம் போன்றோருக்கு இந்த ஆட்சியில் சுகபோகவாழ்க்கை கிடைக்கும்

  • Kalyanaraman - Chennai,இந்தியா

    நம் நாட்டில்தான் ஆதாரம் இன்றி யார் வேண்டுமானாலும் யாரையும் குற்றம் சுமர்த்தலாம். குற்றம் சாட்டப்பட்டவர்தான், தன்னை நிரபராதி என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம். அப்படியே நிரூபித்த பிறகு குற்றம் சுமர்த்தியவருக்கு வெறும் நீதிமன்ற கண்டனம் மட்டுமே. என்ன சட்டமோ? என்று திருத்துவார்கள் இவ்வகை சட்டங்களை? நம் நாட்டில்தான் நல்லது செய்ய பயப்பட வேண்டியுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement