திருப்பத்துார்:2026 சட்டசபை தேர்தலில் பா.ம.க., தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என பா.ம.க., தலைவர் அன்புமணி கூறினார்.திருப்பத்துாரில் இன்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது; திருச்சியில் ஆன்லைன் சூதாட்டத்தினால் 48 வது இளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 19 வது நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆன்லைன் சூதாட்டத்தால் இளைஞர்கள் தற்கொலைக்கு காரணம் தமிழக கவர்னர்தான்.

தமிழகத்தில் போதை பொருட்கள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. போலீசாருக்கு தெரியாமல் விற்பதற்கு வாய்ப்பில்லை. கொரோனாவுக்கு பிறகுதான் மது விற்பனை அதிகரித்துள்ளது. அடுத்த கட்ட இளைஞர்களை பார்க்க முடியாத சூழ்நிலை இருக்கிறது. தமிழகத்தில் போதை பொருட்களை தடுக்க 17 ஆயிரம் போலீசார், ஒரு டி.ஜி.பி., என உருவாக்கப்பட்டு தடுக்க வேண்டும்.பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பெண்கள் அதிகளவு போதை பொருட்களை பயன்படுத்த தொடங்கி விட்டார்கள். இந்தியாவிலேயே டார்கெட் வைத்து மது விற்பனை செய்யக்கூடிய, அதிக மது விற்பனையாகும், சாலை விபத்துக்கள் அதிகம் நடக்கும் மற்றும் அதிக விதவைகள் இருக்கக்கூடிய மாநிலமாக தமிழகம் உள்ளது.
இந்தியாவிலேயே மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் மாநிலமாகவும், அதிகம் தற்கொலை நடக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இவற்றுக்கு காரணம் மது. தற்போது மதுக்கடைகள், பார்கள் அதிகரித்துள்ளது. இவை அனைத்தும் அமைச்சருடைய கூட்டணி என் தெரிகிறது.மதுவால் 30 சதவீதம் வருவாய் தமிழகத்திற்கு கிடைத்து வருகிறது. மது ஒழிப்பு தான் அண்ணா, பெரியார் கொள்கை. தி.மு.க., அவர்களுடைய கொள்கையை ஏற்க மறுக்கிறார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மதுக்கடையை படிப்படியாக குறைப்போம் என மேடைக்கு மேடை பேசி வந்த தி.மு.க., தற்போது ஒரு கடையை கூட மூடவில்லை. தமிழக முதல்வர் ஸ்டாலின் மதுவிலிருந்து இளைஞர்களை காப்பாற்ற வேண்டும்.வரும் 2026 ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ம.க., தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கப்படும். அதற்கு ஏற்ற 2024 எம்.பி., தேர்தலில் யூகங்கள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (36)
கள்ளச்சாராய தயாரிப்பு அதிகமாக நடப்பது வட மாவட்டங்களில் தான். சாதி மக்கள்மீது பாமக வுக்கு உண்மையிலேயே அக்கறை கொண்டிருக்குமானால் இந்நேரம் அது அறவே ஒழிக்கப்பட்டிருக்கும் . ஆனால் உள்ளூர் கட்சித் தலைவர்களே அதில் ஈடுபட்டுக் கொண்டுள்ளதால் டாஸ்மாக்கை மட்டும் எதிர்க்கிறார்கள்.
உருப்படியாக ஒன்றுமில்லாத பாஜகவே தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க ஆசைப் படும் போது பாமக ஆசைப்படுவது தவறில்லை!
அப்பாடா அடுத்த பெட்டி கலெக்ஷனுக்கு இப்பவே துண்டு போட்டாச்சு-அன்புமணி மைண்ட் வாய்ஸ்
//2026சட்டசபை தேர்தலில் பாமக தலைமையில் கூட்டணி ஆட்சி//இதை சொல்லும்போது இந்த மேங்கோபெல்லுக்கே சிரிப்பு வரலையா.இரண்டரை கோடி வன்னியர்கள் இருப்பதாக பெருமை பீற்றிக்கொள்ளும் இவர்கள் தனியாக நின்றால் ஒரு தொகுதிகூட வெற்றிபெற முடியாதது வெட்கக்கேடு.இதில் மாற்றமாம் முன்னேற்றமாம் வெறும் ஏமாற்றம்தான். அதுவும் இவர்களுக்கு மட்டுமே.
இன்னுமா ஆசை உங்களுக்கு. இப்படி பேசிப்பேசியே உங்களுக்கும் வயதாகி விட்டது உங்கள் அப்பாவுக்கும வயதாகி விட்டது அவரால் பேசக்கூட முடியவில்லை.