டிஎன்பிஎஸ்சி தேர்வு விவகாரம்; தமிழக அரசு நடவடிக்கை தேவை: அண்ணாமலை வலியுறுத்தல்
சென்னை: குரூப் 4 தேர்வு முடிவுகளில் முறைகேடு குறித்து, தமிழக அரசு தீவிர விசாரணை நடத்தி, தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருந்தால், மறு தேர்வு நடத்த முன்வர வேண்டும் என தமிழக பாஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசுப் பணித் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு முடிவுகளில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. ஒரே பயிற்சி மையத்திலிருந்து 2000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக வந்த தகவல் பல ஆயிரம் இளைஞர்களின் கடின உழைப்பை வீணாக்கியிருக்கிறது
ஏற்கனவே நில அளவர் தேர்வில், காரைக்குடி மையத்திலிருந்து 700 பேர் வெற்றி பெற்ற நிகழ்வின் பின்னணியில் விசாரணை நடத்தவிருப்பதாக ஆணையம் தெரிவித்த நிலையில், தேர்வு நடந்து எட்டு மாத கால காத்திருப்புக்குப் பிறகு வெளிவந்துள்ள குரூப் 4 தேர்வு முடிவுகளிலும் முறைகேடுகள் என்பது அரசுப் பணிக்காக அயராது உழைத்த தமிழக இளைஞர்களை அவமதிப்பது போலாகும்.

உடனடியாக, தமிழக அரசு தீவிர விசாரணை நடத்தி, தேர்வு முடிவுகளில் முறைகேடுகள் நடந்திருந்தால், மறு தேர்வு நடத்த முன்வர வேண்டும் என்றும், அரசுப் பணிக்காகக் காத்திருக்கும் பல்லாயிரம் இளைஞர்களுக்கான வாய்ப்பினை உறுதி செய்ய வேண்டும் என்றும் தமிழக பாஜ., சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (4)
தமிழ் மொழி தேர்வில் சுமார் 88 சதவிகிதம் பேர் தோல்வி அடைந்ததாகவும், உண்மையான தமிழ் தேர்ச்சி விகிதத்தை வெளியிட்டால் தமிழை வளர்த்து தாங்கி பிடிக்கிறேன் பேர்வழினு அரசியல் செய்யும் திராவிட அரசு மேல் மக்களுக்கு கோபம் கெட்டபெயர் வரும் என்பதால் பல முறைகேடுகளை செய்து அதிகம் பேர் தமிழில் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க தான் TNPSC அதிக கால அவகாசம் எடுத்துக்கொள்ளப்பட்டதாம், குறிப்பிட்ட திக , திமுக கட்சி நபர்களுக்கு தகுந்தாற்போல் சுமார் 8000 இடங்கள் வரை மார்க் அட்ஜஸ்ட் செய்யப்பட்டு விட்டதாக வட்டாரங்கள் பேசிக்கொள்கிறார்கள். இதையும் அண்ணாமலை கவனிக்க வேண்டும்.
விடியலின் விளையாட்டு.. பட்டியில் அடைத்து கொண்டு மூணு வேலை ஒசி சோற்றுக்கு உன் பாரம்பரியத்தை மறந்து ....
எங்கும் எதிலும் ஊழல் ஊழல் என்கிற செய்திகள் வந்துகொண்டே இருப்பதை காணும்போது விஞ்ஞான ஊழலில் தோப்பனாரையும் ஸ்டாலின் மிஞ்சி விடுவார் போலும். பாவம் எவ்வளவு இளைஞர்கள் இதனால் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று எண்ணிப்பார்ப்பாரா? இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கடுமையாக தண்டித்தே ஆகணும். எவ்வளவு பணம் கைமாறியது.. அது எங்கெங்கு சிறகடித்து யார் வீட்டு சமையல் அரசியலில் கலந்திருக்குமோ தெரியவில்லை.கரப்ஷன் கரப்ஷன் கரப்ஷன்..இந்த மூன்று முறை சொன்னவரை மறக்க முடியல..
தி மு க வினர் லஞ்சத்தை ஒழிப்பதாக விளம்பரப் படுத்திக்கொண்டு திரைமறைவில் அதை ஆறாய்ப் பெருக்கெடுக்கவே வைப்பரென்பதே வரலாறு-அதில்.நானும் இன்னும் பலரும் பாதிக்கப்பட்டது நிகழ்கால வரலாறு இறப்புக்கு முந்தைய நிலையில்.