Load Image
Advertisement

சட்டசபைக்கு கறுப்பு உடையில் வந்தது ஏன்? வானதி சீனிவாசன் விளக்கம்

Why did you come to the Assembly in black? Explanation by Vanathi Srinivasan   சட்டசபைக்கு கறுப்பு உடையில் வந்தது ஏன்? வானதி சீனிவாசன் விளக்கம்
ADVERTISEMENT
சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுலுக்கு ஆதரவாக, தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கறுப்பு உடையில் சட்டசபைக்கு வந்தனர். அப்போது, யதேச்சையாக பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசனும் கறுப்பு சேலை அணிந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், எம்.பி., பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதில் கட்சியின் தலைவர்கள் துவங்கி, நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Latest Tamil News
Tamil News
Tamil News
Tamil News
அவ்வகையில், தமிழக காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களும் சட்டசபை கூட்டத்தொடரில் கறுப்பு உடை அணிந்து பதாகை ஏந்தி வந்தனர். ராகுலுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர்.

சட்டசபை கூட்டத்தொடருக்கு பா.ஜ., எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் சற்று தாமதமாக வந்தார். அப்போது அவர் யதேச்சையாக கறுப்பு உடையில் வந்தார். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

அதனை பார்த்த காங்கிரஸ் எம்.எல்.ஏ., விஜயதாரணி, வானதி சீனிவாசனிடம், ''என்ன நீங்களும் கறுப்பு உடையா..., மேடம்...நீங்களும் ஆதரவா'' என விளையாட்டாக கேட்க..., அதற்கு அவர்,'' அய்யய்யோ... இல்லைங்க அதற்காக நான் கறுப்பு உடையில் வரவில்லை'',என்று சிரித்துக்கொண்டே அவர்களைக் கடந்து சென்றார்.

வழியில் நின்ற பத்திரிகையாளர்கள் அனைவரும் கறுப்பு உடை அணிந்தது குறித்து வானதி சீனிவாசனிடம் கேள்வி எழுப்பினர். ஆனால், அவர் சிரித்தபடியே அங்கிருந்து சென்றார்.

சட்டசபைக்குள், சபாநாயகர் அப்பாவு வானதிக்கு பேச அனுமதி அளிக்கும் போது,'' காங்கிரஸ்காரர்கள் தான் கறுப்பு உடையில் வந்திருக்கிறார்கள். நீங்களும் அதே உடையில் வந்திருப்பது போல் தெரிகிறது'' என்றார்.

அதற்கு பதிலளித்த வானதி, '' அவசர நிலை காலத்தில் தமிழகத்தில் ஆளுங்கட்சி தலைவர்கள் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டார்கள் என்பதை நினைவூட்ட கறுப்பு உடையில் வந்திருக்கிறேன்'' என்று பதிலளித்தார்.


வாசகர் கருத்து (6)

  • Narayanan - chennai,இந்தியா

    ஒரு இடைத்தேர்தல் அதுவும் கூட்டணிக்கட்சியின் உறுப்பினர் அவரின் வெற்றிக்கு அனைத்து அமைச்சர்களும் அங்கே வேலைசெய்து பண மழையையும் கொட்டவைத்து ஒரு அசிங்கமான வெற்றி பெற்ற அந்நாள் முதல் சட்டமன்றம் இறந்துவிட்டது .

  • Ellamman - Chennai,இந்தியா

    அண்ணாமலை இதை எப்படி பார்ப்பார்?

  • Raj - Namakkal, Tamil Nadu,சவுதி அரேபியா

    பிஜேபி கட்சியில் ஏதோ வேலை நடக்கிறது

  • ஆரூர் ரங் -

    பல கட்சிகள் மாறிய நாயகருக்கு இப்படி ஒரு பதிலா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement