யாருக்கெல்லாம் 1000 ரூபாய்?: முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
சென்னை: ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் அவர் கூறியிருப்பதாவது: மீனவ பெண்கள், சிறுகடை வைத்திருக்கும் பெண்கள், வீட்டு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும். அனைவருக்கும் வீடு என்றால், வீடு இல்லாதவர்களுக்கு வீடு என்றே பொருள். மகளிர் உரிமைத் தொகையை பெறுவதற்கான வழிகாட்டு முறைகள் விரைவில் வெளியிடப்படும்.
மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அறிவிக்காத திட்டங்களையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நூற்றாண்டின் மகத்தான திட்டம் மகளிர் உரிமைத் தொகை திட்டம். ஆதிக்க வர்க்கத்தால் பெண்கள் வீட்டில் முடக்கப்பட்டார்கள். ஆணின் வெற்றிக்குப் பின் பெண்களின் உழைப்பு உள்ளது. இன்று பள்ளி, கல்லூரிகளில் அதிக மாணவிகள் பயின்று வருகின்றனர்.

பெண்களின் உழைப்பை அங்கீகரிக்கவே மகளிர் உரிமைத் தொகை திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. வீட்டிலும், வெளியிலும் பெண்கள் எத்தனை மணி நேரம் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இந்த திட்டம் யாருக்கு பயனளிக்கும் என்பது பொது மக்களுக்கே தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (36)
இந்த டுபாக்கூர் விளக்கத்தை தேர்தல் வாக்குறுதி அளிக்கும் முன்னாடி சொல்லியிருக்கணும். வீடு இல்லாதவர்களுக்கு வீடு சரி. அதே போல் உரிமைத் தொகை அளிக்கப்படாதவர்களுக்கு உரிமைத் தொகை குடுக்கணுமே?
தேர்தல் வாக்குறுதி நினைவிருந்தால் எந்த விளக்கமும் தேவையில்லை. குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் உரிமைத்தொகை வாங்க உரிமையுண்டு. வாக்குறுதி மாறக்கூடாது.
நேரடியாக பணம் தருவதற்கு பதிலாக அந்தந்த தொகுதி டாஸ்மாக் கடையில் நடப்பு கணக்கு தொடங்கலாம் , மாதம் ஆயிரம் ருபாய் வரை குடிக்கலாம் .
நீங்க உங்க பொறுப்பாளர்கள் நடத்தும் சாராய ஆலைகளைமூடிவிட்டு ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சும் டாஸ்மாக்கையும் மூடிவிட்டால் மாதம் ஐயாயிரம் ரூபாய் சேமிப்பார்கள் அதனால சாராய கடையை உடனடியாக மூடுங்கள்
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
சொன்னது மகளிருக்கு உரிமைத் தொகை. தகுதி உள்ள மகளிருக்குன்னு சொல்லியிருந்தா ஓட்டு விழுந்திருக்குமா. செம்மறியாட்டுக் கூட்டமே. காசுக்கும் பிரியாணிக்கும் ஆசைப்பட்டு ஓட்டை விற்றதற்கு இது போதாது. இன்னும் இருக்கு.