டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முறைகேடு: சட்டசபையில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி ஆவேசம்
சென்னை: டிஎன்பிஎஸ்சியின் நில அளவர் தேர்வு, குரூப் 4 தேர்வு முறைகேடு புகார் பற்றி சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

தமிழக சட்டசபையில் கடந்த 20ம் தேதி 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழக சட்டசபையில் இன்று (மார்ச் 27) பட்ஜெட் மீதான 3வது நாள் விவாதம் காலை 10 மணிக்கு துவங்கியது.
டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு தொடர்பாக, சட்டசபைக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதையடுத்து அவர் பேசியதாவது:
காரைக்குடியில் ஒரே மையத்தில் தேர்வெழுதிய அனைவரும் தேர்ச்சியடைந்தது எப்படி?. தென்காசியை சேர்ந்த ஒரே அகாடமியில் படித்த 2 ஆயிரமக பேர் தேர்ச்சி அடைந்தது விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது.

டிஎன்பிஎஸ்சி முறைகேடு புகாரில் அரசு உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரே பயிற்சி மையத்திலிருந்து அடுத்தடுத்த பதிவெண் கொண்ட தேர்வர்கள் தேர்ச்சி பெற்றது பற்றி விசாரணை வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!