பெலாரசில் அணு ஆயுதம்: ரஷ்ய அதிபர் எச்சரிக்கை

இது குறித்து ரஷ்ய அதிபர் புடின் கூறியதாவது:
உக்ரைனுக்கு சக்தி வாய்ந்த யுரேனிய வெடி பொருட்களை அளிக்க இருப்பதாக பிரிட்டன் சமீபத்தில் அறிவித்துள்ளது. இது, இருதரப்பு படைகளுக்கு மட்டுமின்றி, உக்ரைன் மக்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும்.
இந்த தாக்குதலை எதிர்கொள்ள, பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை சேகரித்து வைக்கும் கிடங்கை அமைக்க ரஷ்யா திட்டமிட்டு உள்ளது.

பெல்ஜியம், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, துருக்கி உள்ளிட்ட நாடுகளில், அமெரிக்கா அணு ஆயுதங்களை வைத்துள்ளது. அவர்கள் காலங்காலமாக பின்பற்றி வருவதைத் தான், நாங்கள் இப்போது செய்ய உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (5)
கேழ்வரகில் நெய் வடியுது என்றால் கேட்பவருக்கு புத்தி எங்கே போகும் அமேரிக்கா பேச்சை ஏன் உக்ரைன் கேட்கிறது.போர் நிறுத்தம் என்பது உக்ரைன் கையில்தான் உள்ளது அமெரிக்காவின் கையில் இல்லை
இங்கே ருஸ்யாவை சொல்லி குற்றமில்லை. அமெரிக்கா தூண்டி விட்டு உக்ரேனை பகடையாக்கி அதன் மூலம் காயை நகர்த்தி வைத்துக் கொண்டிருக்கிறது. உலகமே பேட்டரியை நோக்கி நகரும் இந்த நேரத்தில், தனது எண்ணெயை ஐரோப்பாவில் விற்று கல்லா கட்டிக்கொண்டிருக்கிறது. பொறுத்துப்பாருங்க, அமெரிக்காவின் எண்ணை விற்று தீரும்வரை உக்ரைன் பிரச்சனை தீர்வுக்கு வராது. அதன் பின் உடனே எல்லாம் சரியாகிவிடும். ருசியா எண்ணெயை விற்று வளர்ந்து விட்டால் என்ன செய்வது? என்பது தான் அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் மாபெரும் அச்சம். அந்தப்பக்கம் எண்ணை நாடுகள் தங்கள் தொழிலை மாற்றிக் கொண்டுள்ளன. எல்லாமே பக்கா பிளானிங்.
இந்தப்போர் முடிவுக்கு வரக்கூடாது என்று அமெரிக்கா கங்கணம் கட்டிக்கொண்டு செய்யல்பட்டு வருகிறது.
உலக வெளியுறவு அரசியலின் தற்கால நிலைமை, ரஷ்யாவின் ஒலிகார்க் வரலாறு , உக்ரைன் சோவியத் பிரிவு ஒப்பந்தம்,உக்ரைனின் கடந்த கால ஊழல் நிறைந்த ரஷ்யாவின் பொம்மை அரசு பற்றி தெரியாதவர்கள் நம்மவர்களில் பலர் என்பதற்கு இந்த கமெண்ட்ஸ் பதிவுகள் எடுத்துக்காட்டு. எதற்கு எடுத்தாலும் அமெரிக்காவை குறை சொல்லிட்டா எதிர் பக்கத்தினர் உத்தமர்கள் ஆகிவிடமாட்டார்கள்.