ஒரு டஜன் வாழைப்பழம் விலை ரூ.500: இங்கல்ல பாகிஸ்தானில்

பொருளாதார சிக்கலில் தவித்து வரும் நமது அண்டை நாடான பாகிஸ்தானில் பல்வேறு உணவுப்பொருட்களின் விலை வரலாறு காணாத அளவில் விலை உயர்ந்து உள்ளது. அது மட்டுமல்லாது நாடு அதிக பணவீக்கத்துடன் போராடி வருகிறது.
தக்காளி, கோதுமை மாவு, உருளைக்கிழங்கு, பருப்பு வகைகள் உள்ளிட்ட பொருட்கள் விலை அதிகரித்து காணப்படுகிறது. அதே நேரத்ததில் கோழிக்கறி மிளகாய்தூள், கடுகுஎண்ணெய், பூண்டு, வெங்காயம் ஆகியவற்றில் விலை சரிந்துள்ளது.
உணவு சார்ந்த 51 பொருட்களில் 26 பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. 12 பொருட்களின் விலை குறைந்துள்ளது. 13 பொருட்களின் விலை நிலையாக இருந்துள்ளது எனஅந்நாட்டு தொலைக்காட்சி ஒன்று தெரிவித்துள்ளது.
மேலும் அந்நாட்டில் ஒரு டஜன் வாழைப்பழம் விலை ரூ.250 முதல் 500 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஒருவாரத்தில் வாழைப்பழத்தின் விலை 11.07 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.

பாகிஸ்தானின் புள்ளியில் கணக்கின் படி கடந்த 22 ம் தேதி உடன் முடிவடைந்த வாரத்துடன் கூடிய பணவீக்கம் ஆண்டுக்கு 47 சதவீதமாக பதிவாகி உள்ளது.
வாசகர் கருத்து (14)
மைண்ட் வாய்ஸ்.. பேசாம இந்தியாவில் விளைகின்ற வாழைப்பழத்தை மொத்தமாக விலைபேசி நம்ம பிரியப்பட்ட ஊரு அதாங்க பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செஞ்சு கொள்ளை லாபம் பார்க்கலாம் ..விடமாட்டாங்களே..
மிகை படுத்தப்பட்ட செய்தி போல இருக்கிறது, ஒரு டசன் வாழை ருபாய் 500/- கொடுத்து சாப்பிட மக்களிடம் பொருளாதாரம் உள்ளதா? அப்படி இருந்தால் பொருளாதார ரீதியாக அவர்கள் வலுவானவர்கள், இல்லையெனில் ஸ்ரீலங்கா போல புரட்சி வெடித்திருக்கவேண்டும்.
இந்தியாவை சுத்தி இருக்கும் அண்டை நாடுகள் அனைத்திலும் பொருளாதரா சிக்கல்... மிக பெரிய ஜனத்தொகை கொண்ட நாடான இந்தியா திறம்பட செயல்படுகிறது ...
ஒரு டஜன் வாழைப்பழம் விலை ரூ.500: இங்கல்ல பாகிஸ்தானில்... இந்தியாவில் ரூ.நூறுக்கும் கம்மி விலையில் கிடைக்கிறது. நமது பிரதமர் அறிவித்த பணமதிப்பிழப்பிற்கு பிறகு அதிகம் பாதிப்பிக்கப்பட்டவர்கள் காங்கிரஸ் மற்றும் பாக்கிஸ்தான்.
இவங்களை நம்பக்கூடாது. விட்டால் வாழைபழத்தில் கூட குண்டு வைத்து தீவிரவாதம் செய்வார்கள்