புகார் பெட்டிக்கு
உடைந்த கால்வாயால் அச்சம்
பெரும்பாக்கம், நுாக்கம்பாளையம் உள்ளிட்ட இடங்களிலிருந்து மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர், செம்மொழி சாலையில் உள்ள மாதா கோவில் சந்திப்புக்கு வந்து, அங்கிருந்து இடது பக்கமாக திரும்பி செல்ல வேண்டும்.
இந்த இடத்தில், மூடு கால்வாயின் மேல்பகுதி உடைந்து, திறந்த நிலையில் உள்ளது. இதனால், இடப்பக்கமாக திரும்பும் வாகன ஓட்டிகள்,இந்த கால்வாய்க்குள் தவறி விழுந்து காயமடைகின்றனர். இப்பணியில் தொடர்புடைய அதிகாரிகள் உரிய கவனம் செலுத்தி, கால்வாயின் மேல்பகுதியை மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ச.மணிமாறன், 62, பெரும்பாக்கம்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!