இலவச ரீசார்ஜ் தகவல் போலி என அரசு எச்சரிக்கை
புதுடில்லி-'அனைத்து, 'மொபைல் போன்'களுக்கும் மத்திய அரசு, 239 ரூபாய் மதிப்புக்கான இலவச, 'ரீசார்ஜ்' அளிப்பதாக, 'வாட்ஸ் ஆப்' செயலி வாயிலாக பரவும் தகவல் போலியானது' என, அறிவிப்பு வெளியாகி உள்ளது.
'மொபைல் போன்' பயன்படுத்தும் அனைவருக்கும், 239 ரூபாய் மதிப்பில், 28 நாட்களுக்கான இலவச, 'ரீசார்ஜ்' திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளதாக 'வாட்ஸ் ஆப்' செயலி வாயிலாக குறுந்தகவல் பரவியது.
அதில், கீழ்காணும் நீல நிற, 'லிங்க்' எனப்படும் இணைப்பை 'கிளிக்' செய்து வரும், 30ம் தேதிக்குள், 'ரீசார்ஜ்' செய்து கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தகவல் போலியானது என்றும், பொதுமக்கள் அதை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது. இதே போல, ஸ்டேட் வங்கி தொடர்பாகவும் சமீபத்தில் ஒரு வதந்தி பரவியது.
ஸ்டேட் வங்கி கணக்கு வைத்திருப்போர், தங்கள் கணக்கு காலாவதியாவதை தடுக்க, கீழ்கண்ட இணைப்பை கிளிக் செய்யும்படியும், 'பான்' அட்டை எனப்படும், நிரந்தர வருமான வரி கணக்கு அட்டையை புதுப்பிக்கும்படியும் அதில் கூறப்பட்டிருந்தது. இந்த செய்தியும் போலியானது என, மத்திய அரசு ஏற்கனவே எச்சரித்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
டிஜிட்டல் புரட்சி... மக்களுக்கு டாபப் பிச்சை போடறேன்னு சொன்னாலும் நம்பிடும் கூட்டம். எதுவுமே இலவசம் கிடையாதுடா...