துாத்துக்குடி துறைமுகத்துக்கு ரூ. 200 கோடியில் 6 வழிச்சாலை
புதுடில்லி-தமிழகத்தில் துாத்துக்குடி துறைமுகம் பகுதியில் போக்குவரத்தை மேம்படுத்த ஆறு வழிச்சாலை திட்டத்திற்காக 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடல்வழி போக்குவரத்திற்கு முக்கிய இடமாக துாத்துக்குடி திகழ்கிறது. இங்குள்ள துறைமுகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
இதையடுத்து, துாத்துக்குடி துறைமுகத்திற்கான போக்குவரத்தை மேம்படுத்த, இப்பகுதியில் ஆறு வழிச்சாலை அமைக்கும்படி பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இங்கு ஆறு வழிச் சாலை திட்டத் துக்கு 200.30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
இவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
துறைமுக தளத்தை மேம்படுத்தும் வகையில், துாத்துக்குடி துறைமுகச் சாலை என்.எச்-., 7 ஏ பகுதியில் ஆறு வழிச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக தற்போது 200.30 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. 5.16 கி.மீ., துாரம் வரை, துாத்துக்குடி துறைமுகம் பகுதியில் போக்குவரத்தை மேம்படுத்துவதற்காக இந்த ஆறுவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!